காவிரியை தடுத்து நிறுத்தி தோற்ற மன்னர்
காவிரி சண்டையின் முதல் துவக்கம் இதுதானோ?
காவிரி சண்டையின் முதல் துவக்கம் இதுதானோ?
திருச்சிராப்பள்ளி வளஞ் செறிந்த நாடாக இருந்தமையால், மைசூர் மன்னரான சிக்க தேவராயர் அதனை தனது நாட்டுடன் சேர்த்துக் கொள்ள விரும்பினார். எனவே திருச்சி கோட்டையை கைப்பற்ற குமரய்யன் என்பவரை பெரும் படையுடன் அனுப்பி திருச்சிக்கோட்டையை பலகாலம் முற்றுகை இட்டார். செஞ்சியின் அரச பிரதிநிதி ஹரிஜி மதாதி திருச்சி மன்னருக்கு உதவவே முற்றுகையை குமரய்யா நீக்கினார்.
திருச்சி கோட்டை தமிழக வரலாற்றில் பல முற்றுகைகளை கண்டது. பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தில் இதை பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் மராட்டியர் ஏனையோடும் முற்றுகையிட்டுள்ளனர்.
.
முற்றுகையை நீக்கி திரும்பி ஓடிய குமரய்யனை கண்டும் கூட சிக்க தேவராய தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே அவர் வேறு வழியில் தனது நோக்கத்தை நிறைவேற்றிட முயன்றார். காவிரி நீர் மதுரை நாயக்கர் ஆட்சி பகுதியில் பாயாமல் அதை மைசூரின் பிற பகுதிகளுக்கு திருப்பி விட்டார். மதுரை நாயக்கரை எளிதில் அடிபணியச் செய்து விடலாம் என கருதினார்.
இக்காலகட்டத்தில் அரசி மங்கம்மாள் (1689 -1706) திருச்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்கிறார். சிக்கதேவராயர் 1801 ஆம் ஆண்டு காவிரியை தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட விளைவுகளை இயேசு சபை சாமியாரான டி வில்லர் 1701 இல் எழுதிய கடிதத்தில் கூறுவதாவது.
"எவருக்கும் பயனின்றி காற்று வீசியபடி இருந்தது. காவிரி ஆறு தொடர்ந்து வற்றிக் கொண்டே வந்தது. பெரும் பஞ்சம் வரும் என மக்கள் அஞ்சிக் கிடந்தனர். இருப்பினும், பருவ காலத்தில் மழை பெய்தது. மைசூர் மன்னர் ஒரு பெரிய அணைச்சுவரை எழுப்பி கால்வாய் நெடுகிலும் நீடித்திராவிடில் மலைகளில் இருந்து பெருக்கெடுத்து ஓடிவந்த வெள்ளம் வழக்கம் போல் கொள்ளிடம் வரையில் பாய்ந்திருக்கும். அவர் ஆற்று நீரை இந்த அணை வழியே தனது நாட்டினுள் பாயச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு இதை செய்தார். ஆனால் அவர் தனது நிலம் செழிக்க வேண்டும் என்று இவ்வாறு முடிவு எடுத்த நேரத்தில் மதுரையும் தஞ்சையும் சீரழிக்கின்றார்.
எனவே நமது அரசுகளின் நலன் மீது அக்கறை கொண்ட இச் சிற்றரசர்கள் (மதுரை தஞ்சை) அவரது முயற்சியினால் ஆத்திரமடைகின்றனர். அதனால் அவர்கள் ஒன்று சேர்ந்தனர். தமது பொது எதிரியை ஆயுதம் கொண்டு எதிர்த்து தமக்கு மிகுந்த இடையூறாகிய அணைக்கரையை அழிக்கத் திரண்டனர்.
அதற்கென அவர்கள் பெரிய அளவில் ஆயத்தமான வேலையில் தனது ஓட்டத்தை மடக்கி தன்னை அவமதித்த மைசூர் மன்னரை பழி வாங்குவதைப் போன்று கொள்ளிடம் ஆறு பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றின் வெள்ளம் அதிகரித்து மைசூர் மன்னர் கட்டிய அணைக்கரையை தன்னோடு இழுத்துச் சென்றது. இதற்கென பெரும் செலவு செய்து இதனால் ஆதாயம் பெறலாம் என்று கருதி இருந்த மைசூர் மன்னரின் எண்ணம் இவ்வாறு குலைந்தது. "
ஆனால் சிக்கதேவராயர் கட்டிய இந்த அணைக்கரையும் கால்வாயும் பின்னாளில் கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணைக்குக் கால்கோள் எனலாம். அவர் 1701-ல் கட்டிய அணைக்கரையும் பெரிய கால்வாயும் இன்றும் சிக்க தேவராய சாகரம் என்றுதான் அழைக்கப்படுகின்றது. கரடு முரடான கற்களை கொண்டு அவர் கட்டிய சுவருக்கு மடது கட்டி என பெயர். அது தாழ்வான அணைக்கரையாகும். காவிரி கணிசமான தொலைவிற்கு ஓடி வந்தபின் சிக்கதேவராய சாகரத்தினுள் பாய்ந்து இந்த கால்வாய் வழியை செல்கிறது. கர்நாடக மாநிலத்தில் இன்று மிகச்சிறந்த கால்வாய்களில் இது ஒன்றாகும். அக்கால்வாய் காவிரியின் இடது கரை நெடுகிலும் 72 மைல் தொலைவு செல்கிறது.
அரசியலைப் பொறுத்தளவில் அன்று தோல்வியாக இருப்பினும் இன்று மைசூரில் மேற்கொள்ளப் பட்டிருக்கும் பல்வேறு பாசன திட்டங்களுக்கு இதுவே முன்மாதிரி எனலாம்.
The King Who Stopped the Cauvery – And Lost
The Beginning of the Cauvery Conflict?
The Beginning of the Cauvery Conflict?
In the rich lands of Tiruchirappalli, an important chapter of the Cauvery River dispute began. Mysore's king, Sikka Devaraya, coveted the fertile Trichy region and sought to annex it to his kingdom. He dispatched his commander, Kumaraiyaan, with a formidable army to lay siege to the Trichy fort. The siege dragged on, but Kumaraiyaan eventually lifted it, aiding Trichy’s ruler, Hariji Madathi, a royal representative of Genghis Khan’s lineage.
The Trichy fort has been the site of many such sieges in Tamil Nadu’s history, notably during the 18th century, when it was besieged by the French, the British, the Marathas, and others.
However, even after Kumaraiyaan’s retreat, Sikka Devaraya’s ambitions remained unshaken. When a direct siege didn’t achieve his goal, he devised another plan: divert the Cauvery River's flow away from the lands of the Madurai Nayak kingdom, aiming to force the Nayaks into submission.
At this time, Queen Mangammal (1689-1706) ruled from Trichy. In a letter dated 1701, Jesuit Father de Viller describes the devastating consequences of Sikka Devaraya’s actions:
"The winds were of no use, and the mighty Cauvery began to dry up. The people feared famine. Even though the rains arrived on time, if the King of Mysore hadn’t built a dam and extended a canal, the river would have continued its natural course, all the way to Kollidam. Instead, he diverted the river, aiming to make his land flourish, while devastating the lands of Madurai and Thanjavur."
The local rulers of Madurai and Thanjavur, infuriated by the king’s efforts, united against their common enemy. They launched a large-scale campaign to destroy the dam, which stood as a monumental obstacle. Their plan succeeded when a massive flood in the Kollidam River swept away Sikka Devaraya’s dam, leaving the king’s grand scheme in ruins. Despite the heavy expenditure on this project, his hopes for domination ended in failure.
A Lasting Legacy
The canal, one of the most important in Karnataka today, runs 72 miles along the Cauvery’s left bank. Although Sikka Devaraya’s political strategy failed, his contributions to irrigation left a lasting mark, influencing the development of modern water management projects in Mysore.
Though the dam built by Sikka Devaraya was destroyed, it laid the foundation for future irrigation projects in the region. This effort, considered a failure in its time, served as inspiration for later constructions such as the Krishnaraja Sagar Dam. The dam and canal system Devaraya built-in 1701 is still known today as "Sikka Devaraya Sagar." The dam’s rough stone wall, referred to as "Madhu Gatti," continues to stand.
Post a Comment