Translate

44. GDS Welfare Fund -5 GDS ஊழியரின் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை

Team’s Daily Bytes

GDS Welfare Fund -5

By Com A.Kesavan, Asst General Secretary

11.

GDS ஊழியரின் உடல் ஊனமுற்ற

குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை

ரூ.220/மாதம்

 

Sl.No. 11. பெறுவதற்கான தகுதிகள்

 

·  GDS ஊழியரின் உடல் ஊனமுற்ற/மனவளர்ச்சி

குன்றிய/பார்வையற்ற/காது கேளாத/வாய் பேச முடியாத குழந்தைகளுக்காக

இவ்வுதவித்தொகை வழங்கப்படுகிறது.

நிரந்தரமான 40% இயலாமையுடைய, உடல் ஊனமுற்ற GDS ஊழியரின்   குழந்தைகளும் இவ்வுதவித்தொகையை பெறலாம்.

·  அரசு மருத்துவ அலுவலரின் மருத்துவ சான்று அவசியமானதாகும்.

·  இக்கல்வி உதவித்தொகை அதிகபட்சம் 8 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

 

12.

தீ/வெள்ளம்/வறட்சி/புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் அழிவுகளுக்கான நிதிஉதவி

ரூ.5,500/-

-

Sl.No. 12.. பெறுவதற்கான தகுதிகள்

 

 #சம்மந்தப்பட்ட மாநில அரசு/ வருவாய் துறை அப்பகுதியை இயற்கை

சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அப்பகுதி  மக்களுக்கோ/அதனது ஊழியருக்க இதே போன்றதொரு நிதிஉதவி அளித்திருக்க வேண்டும்.

*இயற்கை சீற்றத்தினால் அதிதீவிரமாக பாதிக்கப்படுதல்/தீயினால்

சொத்துக்கள் எரிந்துபோதல்/வெள்ளத்தினால் சொத்துக்கள் தீவிரமாக பாதிப்படைதல்/

அதில் குழந்தைகளின் புத்தகங்கள் அழிந்துபோதல் போன்ற காரணங்களுக்காக மட்டுமே

GDS ஊழியருக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் நன்கு ஆய்வு செய்யப்பட்டு பின் இந்நிதியுதவி வழங்கப்படும்.

*இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட பகுதி என அரசாங்கம் அறிவித்த மூன்று மாத காலத்திற்குள்ளாக விண்ணபிக்க வேண்டும்.

 

 

SOURCE : Directorate Lr. No. (No.20-09/2019 WL& Sports dtd 11.09.24 


Post a Comment

Previous Post Next Post