திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
• இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
• திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
• சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது
வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும்,
இல்லது காமுற்று இருப்பானும், கல்விச்
செவிக் குற்றம் பார்த்திருப்பானும், - இம் மூவர்
உமிக் குற்றுக் கை வருத்துவார். . . . .[28]
• வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும்: வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் கோபத்துடன் பேசும் தவம் இல்லாதவர்.
• இல்லது காமுற்று இருப்பானும்: அறம் இல்லாமல் கிடைத்தற்கரிய பொருள்களைச் மட்டுமே விரும்பி ஈடுபடுபவர்.
• கல்விச் செவிக் குற்றம் பார்த்திருப்பானும்: கற்றறிந்தும் பிறன் கல்வியில் குற்றத்தைப் பார்ப்பவர்.
• வெற்றிக்காக கோபப்படுபவர், அறமற்ற காமத்தில் ஈடுபடுபவர், கற்றறிந்தும் தவறு செய்பவர் ஆகிய மூவரும் தங்கள் செயல்களால் வருத்தப்படுவார்கள்.
வெல்ல வேண்டி சினந்து சொல்கின்ற தவம் இல்லாதவனும், கிடைத்தற்கரிய பொருளை விரும்புபவனும், பிறன் கல்வியில் குற்றத்தைப் பார்ப்பவனும் ஆகிய இம்மூவரும் துன்பத்தையே அடைவர்.
Post a Comment