திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
• இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
• திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
• சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது
உண் பொழுது நீராடி உண்டலும், என் பெறினும்
பால் பற்றிச் சொல்லா விடுதலும் தோல் வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை, - இம் மூன்றும்
தூஉயம் என்பார் தொழில். . . . .[27]
• உண் பொழுது நீராடி உண்டலும்: நேரத்தில் குளித்து உணவு உண்பது.
• என் பெறினும் பால் பற்றிச் சொல்லா விடுதலும்: தனக்கு கிடைத்ததைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாகச் பொய் சொல்லாமல் இருப்பது.
• தோல் வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை: வயதாகி உடல் நலிந்தாலும் நல்லொழுக்கத்தை விட்டுவிடாமல் இருப்பது.
• நேரத்தில் குளித்து உணவு உண்பது, தனக்கு கிடைத்ததைப் பற்றி பெருமையாகச் சொல்லாமல் இருப்பது, வயதாகி உடல் நலிந்தாலும் நல்லொழுக்கத்தை விட்டுவிடாமல் இருப்பது ஆகிய மூன்றும் தூய்மையானவர்களின் தொழில் ஆகும்.
குளித்தபின் உண்ணுவதும், பொய் சொல்லாமல் இருத்தலும், தோல் வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து குறையாமையும், ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும்.
Post a Comment