இந்தியாவில் இஸ்லாமிய ராஜ்யங்கள் ஸ்தாபிக்கப்பட்ட பிறகே, நாடு முழுவதும் ஒரே மாதிரியான நாணயங்கள் ஏற்பட்டன. தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளி நாணயங்களில், முகலாயர்களின் மத நம்பிக்கையைக் குறிக்கும், "கலிமா' ஒருபுறமும், மறுபுறத்தில் அரசரின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். அத்துடன், நாணயம் தயாரிக்கப்பட்ட இடத்தையும், வருடத்தையும் பொறித்திருப்பர்.
பொன் நாணயங்களை வட்ட வடித்திலும், சதுர வடிவத்திலும் தயாரித்தனர். பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட மொகலாய அரசர்களான அக்பர், ஜஹாங்கீர் காலத்திய நாணயங்கள், மிகவும் வேலைப்பாடுகள் உடை யவை.
வெள்ளி ரூபாய் நாணங்களையும், மொகலாய அரசர்களே வெளியிட்டனர். ஒரு, "மொஹார்' பொன் நாணயம், பதினான்கு வெள்ளி ரூபாய் நாணயத்துக்குச் சமம். இந்தியா வுக்கு வணிகம் செய்ய வந்த பிரெஞ்சு, ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிகள், பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, இதையே பின்பற்றி நாண யங்களை வெளியிட்டு வந்தன. இத்துடன், ரூபாயின் பின்னங்களான அணா, அரையணா, காலணா நாணயங்களையும் உண்டாக்கினர்.
இஸ்லாமிய மதக் கோட்பாட்டின்படி, உருவத்தை செய்யக் கூடாது. அதனால், முகமது அரசர்களின் காலத்தில், நாணயங்களில் உருவங் கள் பொறிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, சரித்திர காலத்தைக் குறிக்க, அப்போது ஆண்ட அரசர்களின் பெயர், நாணயம் தயாரிக்கப்பட்ட இடம், காலம், குரானின் சில எழுத்துக்கள் ஆகியவையே நாணயங்களில் பொறிக்கப் பட்டிருந்தன.
Post a Comment