இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
"செப்பு மொழி பதினெட்டுடையாள்...' என்று, அன்னை பாரதத்தைப் போற்றிப் பாடினார் பாரதி. அந்தப் பதினெட்டு மொழிகள் எவை? அங்கம், அருணம், கலிங்கம், கவுசிகம், காம்போசம், கொங்கணம், கோசலம், சாவகம், சிங்களம், சிந்து, சீனம், சோனகம், திராவிடம், துளுவம், பப்பரம், மகதம், மராடம், வங்கம் ஆகியன. இதில், திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் அடங்கும். ***
Post a Comment