குமரி மாவட்டத்தில், சிற்றாறு அணையைக் கட்டும் திட் டத்தைக் கொண்டு வந்தார் காமராஜர். உடனே, ரப்பர் தோட்ட முதலாளிகள் ஒன்று சேர்ந்து, ஒரு குழுவாக காம ராஜரை சென்று சந்தித்தனர். "அணை கட்டப் படுமானால், ஆயிரக்கணக் கான ஏக்கர் ரப்பர் எஸ்டேட் அழிந்து விடும்; எனவே, அணை கட்டும் திட் டத்தைக் கை விட வேண்டும்!' என்றனர்.
காமராஜர் அவர்களிடம், "அரிசிக்குப் பதிலாக ரப்பரைத் தின்று, உயிர் வாழ முடியு மானால் கூறுங்கள்... அணைத் திட்டத்தை கைவிடுகிறேன்!' என்றார்.
வந்தவர்கள் பேசாமல் எழுந்து சென்றுவிட்டனர்.
***
Dinamalar 8.8.2010
தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -22
இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
Post a Comment