Translate

"சேரிப் பெண் ஒருத்தியை, ஒருவன் உலகப்புகழ் பெற்ற நாடக நடிகையாக்க முயல்கிறான்...'

* அந்த இளம் பெண், மிகவும் அழகானவள். நாடகங்களில் நடித்து பெயரும், புகழும் பெற வேண்டும் என்பது அவள் ஆசை. அவள், சேரிப் பகுதியில் குடிசைகளுக்கு மத்தியில், வாழ்ந்து வளர்ந்தவள். அதனால், அவள் பேச்சு பிறர் மதிக்கத்தகாத, சேரிப் பேச்சாக இருந்தது. இலக்கண ரீதியாக, அவளைப் பேச வைக்க நாடகக்காரர்கள் முயற்சி செய்தனர்; ஆனால், பலிக்கவில்லை. எனவே, அவளை ஒதுக்கி விட்டனர். பின், அவள் நாடகாசிரியர் பெர்னாட்ஷாவை சந்தித்தாள். தனக்கு நாடகத்தில் நடிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு நச்சரிக்கத் தொடங்கினாள். அவள் நச்சரிப்பிலிருந்து மீள்வதற்காக, "பிக்மேலியன்' எனும் ஒரு நாடகத்தை எழுதினார். "சேரிப் பெண் ஒருத்தியை, ஒருவன் உலகப்புகழ் பெற்ற நாடக நடிகையாக்க முயல்கிறான்...' என்பதுதான் கதையின் அடிப்படைக் கரு. தம்மை நச்சரித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணையே  நடிக்க வைத்தார் பெர்னாட்ஷா. அவள் நாடகத்தில் பேசிய,"சேரிப்பாணி' பேச்சு, அவளுக்குப் பிரமாதமான புகழைத் தந்தது. சேரிப் பேச்சு அவளது இயல்பான பேச்சு என்பதைப் புரிந்து கொள்ளாத மக்கள், கதாபாத்திரத்தின் இயல்புக்கு ஏற்ப செயற்கையாகஅவள் அப்படிப் பேசி நடித்தாள் என்று கருதினர். பின்னாளில், அவள் உலகப் புகழ் பெற்ற நாடக நடிகையானாள்.  

 தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -16

இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.





Post a Comment

Previous Post Next Post