சங்கத்தமிழ் பழமொழி நானூறு
7. கோழைக்குப் பாதுகாப்பே கிடையாது!
வலிமை உடையவர்களின் துணையுடையவர்கள் என்றாலும்,
தம் அளவிலே வலிமையில்லாதவருக்கு, வலிமையைப் பெய்து அவரைப் புகழிலே நிலை பெறுத்துதல்
எவராலும் ஆகுமோ? ஆகவே ஆகாது. வெண் மேகங்கள் தங்கம் சோலைகளையுடைய மலை நாடனே! எப்படிப்பட்ட
துணைகளை உடையவர்களானாலும், உள்ளத்தில் அஞ்சி நடுங்கும் கோழைகளாக இருப்பவர்களுக்குப்
பாதுகாக்கும் அரண் என்பது எதுவுமே கிடையாது என்று அறிவாயாக.
வன்சார்(பு) உடையர் எனினும் வலிபெய்து
தஞ்சார்(பு) இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ
மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
'அஞ்சுவார்க் கில்லை அரண்'.
No comments:
Post a Comment