Translate

41. "நீ கட்டிய கோவிலில், கிழவியின் நிழலில் சுகமாக இருக்கிறேன்.

 தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜசோழன் கட்டி 1000வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. இது சம்பந்தமாக பல நூறு ஆண்டுகளாக வழங்கும் ஒரு கர்ண பரம்பரைக் கதை:

 சிற்பிகள் இரவு பகலாக கோவிலைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் கிழவி ஒருத்தியும் பங்கு கொண்டாள். சிற்பிகளுக்குத் தாகம் எடுக்கும்போது, குளிர்ந்த நீரைக் கொடுத்து உதவி வந்தாள்.
எல்லாப் பணிகளும் முடிந்து, கடைசியாக கர்ப்ப கிரகத்தின் மேல் விமானம் அமைக்கும் வேலை நடந்து வந்தபோது, "பாட்டி... உங்கள் பொருள் ஏதாவது ஒன்று கொடுங்கள். அதை விமானத்தில் வைக்கிறோம்...' என்றனர், சிற்பிகள்.

"என் வீட்டு வாசற்படி தான் இருக்கிறது. வேறென்ன என்னிடம் உள்ளது?' என்றாள் அவள்.

விமானத்தின் உச்சியில் கலசங்களை அமைப்பதற்கான பிரம்மரந்திரத்தை மூடும் கருங்கல் பலகை ஒன்று தேவையாக இருந்தது. பாட்டி வீட்டு வாசற்படிக் கல்லை அதற்குப் பயன்படுத்திக் கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை நாடு போற்றும் விதமாகக் கொண்டாடினான் ராஜராஜன். அன்றிரவு அவன் கனவில் சிவபிரான் தோன்றினார். "கோவில் அழகாக அமைந்திருக்கிறதா?' என்று கேட்டான் மன்னன். "நீ கட்டிய கோவிலில், கிழவியின் நிழலில் சுகமாக இருக்கிறேன்...' என்றார் சிவன்.

விழித்துக் கொண்ட மன்னன், மனதில் இருந்த கர்வம் கரைந்தது. கிழவி போன்ற சிறந்த பக்தைகள் தன் நாட்டில் இருப்பதை அறிந்து மகிழ்ந்தான்.

பிடித்தது -41

இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.

Post a Comment

Previous Post Next Post