Saturday, November 23, 2024

37. "கழகக் கொள்கைகளை விளக்கக் கூடிய ஆங்கில புத்தகங்கள் என்னென்ன வைத்திருக்கிறீர்கள்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெனாலியில் பேசுவதற்காக, அண்ணாதுரையை அழைத்துப் போக, கோபால கிருஷ்ணமூர்த்தி எனும் ஆந்திரத் தோழர் வந்திருந்தார். அவர், "கழகக் கொள்கைகளை விளக்கக் கூடிய ஆங்கில புத்தகங்கள் என்னென்ன வைத்திருக்கிறீர்கள்; அவற்றை எல்லாம் கொடுங்கள். எடுத்துச் சென்று எங்கள் நாட்டிலுள்ளவர்களுக்குக் காண்பிக்க வேண்டும்!' என்று அண்ணாதுரையிடம் கேட்டார்.

அவர் கேட்டபடி கொடுக்கக்கூடிய ஆங்கிலப் புத்தகங்கள், இருந்தால் தானே கொடுப்பதற்கு! ஆகவே, அண்ணாதுரைக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. சாமர்த்தியமாக, "கழகக் கொள்கைகளை விளக்கும் புத்தகங்கள், தலைமை நிலையத்தில் இருக்கின்றன...' என்றார் அண்ணாதுரை.

"ஒரு கடிதம் கொடுங்கள்... நான் போய் வாங்கிக் கொள்கிறேன்...' என்றார் அவர்.

"இன்று நெடுஞ்செழியன் இல்லை; பிறகு நான் அனுப்பச் சொல்கிறேன்...' என்றார் அண்ணாதுரை. "நெடுஞ்செழியன் இல்லாவிட்டால் என்ன, தலைமை நிலைய நிர்வாகி கூடவா இல்லை?' என்று கேட்டார். "ஆமாம்... அவர் கூட நான்கு நாட்களாக விடுமுறையில் இருக்கிறார். நான் தெனாலிக்கு வரும் போது எடுத்து வருகிறேன். நீங்கள் போங்கள்!' என்று அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு அண்ணாதுரை, தெனாலிக்கு போய் காரை விட்டு இறங்கியதும், "புத்தகம் எடுத்து வந்தீர்களா?'' என்று கேட்டார் அந்தத் தோழர்.

"பெட்டி நிறைய எடுத்து வைத்தேன்; ஆனால், அதை காரில் எடுத்து வைக்க மறந்து விட்டார் டிரைவர். பிறகு அனுப்பி வைக்கிறேன்!' என்று கூறி, தப்பித்துக் கொண்டார். 

தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -37

இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.


No comments:

Post a Comment