பிரெஞ்சு நாட்டில், பனிரெண்டாம் லூயியின் ஆட்சிக் காலம். அரசு அதிகாரி ஒருவர், ஒரு விவசாயியை கீழ்த்தரமாக நடத்தி, அவமானப்படுத்தி விட்டதாய் வழக்கு வந்தது. விசாரித்தபோது, அது உண்மையென்றும் தெரிந்தது. அந்த அதிகாரிக்கு, பனிரெண்டாம் லூயி மன்னன் தந்த தண்டனை விசித்திரமானது. வீட்டுச் சிறையில் வைத்து, மூன்று வேளையும் உணவாக மாமிசமும், ஒயினும் மட்டுமே தரச்சொல்லி உத்தரவிட்டான். உஷ்ணத்தை மிகுதியாக்கும் இந்த உணவால் துடித்துப் போன அதிகாரி, தனக்கு ரொட்டி தர வேண்டும் என்று விண்ணப்பித்த போது மன்னன் சொன்னான்,
"உனக்கு ரொட்டி கொடுக்கிற விவசாயிகளை அவமதித்த முட்டாளல்லவா நீ! உனக்கு ரொட்டி கிடையாது!'என்றான்.
தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -35
இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
Post a Comment