எம்.ஜி.ஆர்., பதில்கள்:
உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருக்கின்றனரா?
நானே இருக்கிறேனே, போதாதா?
உண்மை அழிந்த பின், நிலைத்திருப்பது என்ன?
உண்மை தான்! ஏனென்றால், அது அழிவது கிடையாது.
நீங்கள் எதை நம்புவதில்லை?
நடிகர்களுக்குக் கிடைக்கும் புகழ் நிரந்தரமானது என்பதை!
எதிர்ப்புகளைத் தாங்கக் கூடிய மனப்பக்குவத்தை எப்படி பெற்றீர்கள்?
என் வளர்ச்சியாலோ, எனக்குக் கிடைக்கிற ஆதரவாலோ அல்லது என்னையும் அறியாமல் நான் செய்கிற தவறுகளாலோ இன்று எனக்கு எதிர்ப்புகள் இருக்கலாம். ஆனால், கடந்த காலத்தில் இப்படிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லாமலேயே, பல துன்பங்களையும்,
துயரங் களையும் தாங்கி, பரிதாப நிலையில் வாழ்ந்தவன் நான். அதை எண்ணிப் பார்க்கும் போது, இந்தத் தாக்குதல்களும், எதிர்ப்பும் எனக்கு மிகச் சாதாரணமாக தோன்றுகிறது.
—"சமநீதி'
இதழிலிருந்து...
தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -34
இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
Post a Comment