Monday, November 11, 2024

25. "அந்நியரான நீங்கள் எங்களுடைய பழக்க வழக்கங்களைத் தெரிந்து.......பளிச்சென்று பதில்

பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னா, ஒரு காலத்தில் இந்திய விடுதலைக்காகத் தீவிரமாகப் போராடியவர். அவர் இஸ்லாமியராக இருந்தாலும், ஒரு பாரசீகப் பெண்ணை மணந்து கொண்டார். ஜின்னாவும், அவரது மனைவியும் ஒருமுறை, பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் அளித்த விருந்துக்குச் சென்றிருந்தனர். அப்போது கவர்னர் ஜெனரல், "சிலருக்கு பிரிட்டிஷாரின் பழக்க வழக்கங்கள் சரியாகத் தெரியவில்லை; அதை அவர்கள் முறையாகக் கற்றுக் கொள்வது அவசியம்...' என்று குறிப்பிட்டார். உடனே, "மன்னிக்க வேண்டும் கவர்னர் ஜெனரல் அவர்களே... அந்நியரான நீங்கள், எங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறீர்கள். எங்கள் நாட்டுக்கு வந்துள்ள நீங்கள் தான், எங்களுடைய பழக்க வழக்கங்களைத் தெரிந்து, அதன்படி நடக்க வேண்டுமே தவிர, உங்களுடைய பழக்க வழக்கங்களை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனச் சொல்வது அர்த்தமில்லை...என, பளிச்சென்று பதில் சொன்னார் ஜின்னாவின் மனைவி.

கவர்னர் ஜெனரல் மவுனமாகி விட்டார்.

 தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -25

இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.



No comments:

Post a Comment