போதி தர்மரை சந்தித்த ஓர் அரசன், தன் கவலைகள் பற்றிக் கூறினான்.
"நாளை விடியற் காலை இங்கு வா! என் பிரம்போடு காத்திருக்கிறேன். உன் கவலைகளையும் கொண்டு வா! அவற்றை ஓட ஓட விரட்டுகிறேன்!' என்று போதி தர்மர் சொன்னார்; அரசன் குழம்பினான்.
அடுத்த நாள் காலை, தயங்கித் தயங்கி வந்தான். பிரம்பை நீவிக் கொண்டே போதி தர்மர், "எங்கே உன் கவலைகள்...' என்றார். "அவை பொருட்களல்ல, எனக்குள் இருக்கின்றன...' என்று சொன்னான் அரசன்.
"கண்மூடி அமர்ந்து அவற்றை வெளியே கொண்டுவா...' என்றார் போதி தர்மர். கண்மூடி அமர்ந்து, தன் கவலைகளை கவனிக்க கவனிக்க, அவை வினாடியில் கரைந்து போவதை உணர்ந்தான். கண் திறந்து, கைகூப்பி, "உண்மை தான்... என் கவலைகளை ஓட ஓட விரட்டி விட்டீர்கள்...' என்றான். ***
தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -21
இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
Post a Comment