சரியோ, தவறோ, தொலைபேசியைக் கையில் எடுத்ததும் முதலில் பேசுவது, "ஹலோ' தான்!
ஆனால், முதன் முதலில் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டபோது, கேட்ட குரல், "வலியால் ஏற்பட்ட அலறல்!' தான் என்றால், வியப்பாய் இருக்கிறதல்லவா?தொலைபேசியைக் கண்டு பிடிக்கும் சோதனையில், தீவிரமாக ஈடுபட்டிருந்த கிரகாம்பெல், தோல்வியால் துவண்டிருந்த நேரம். அவர் கையிலிருந்த குடுவையிலிருந்து, அமிலம் கீழே சிதறியது. காலில் பட்ட இடம் நெருப்பாக எரிந்தது. வலியால் துடித்துக் கதற ஆரம்பித்தார்.
அடுத்த அறையிலிருந்த அவர் உதவியாளர் தாமஸ் வாட்சன், மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார். காரணம், "பெல்'லின் அலறல் அவருக்கு தொலைபேசியில் கேட்டு விட்டதே! அவர்கள் வெற்றி பெற்று விட்டனர்.
தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -17
இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
Thank you Sir
ReplyDeletePost a Comment