சங்கத்தமிழ் பழமொழி நானூறு
14. இனத்தைக் கொண்டே மதிப்பிடலாம்
கயல் மீன்களையும் தம் நீட்சியால் மாறுபாடு
கொள்ளச் செய்யும் மை தீட்டிய கண்களை உடையவளே! பக்கத்து வீட்டார்கள் அறியாதவாறு சமைத்து
உண்பதென்பது ஒரு போதுமே இயலாது. அதனால் ஒருவருடைய தன்மையை அறியப் பெரிய முயற்சிகள்
எதுவுமே தேவையில்லை. காட்டில் வாழும் முனிவர்களே என்றாலும், அவர்கள் நல்ல இயல்பினர்களா
அல்லது தீய இயல்பினர்களா என்பதை, அவருடன் சேர்ந்திருப்பவர்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம்.
அவரியலை மெய்ப்பிக்க வேறு சாட்சிகள் எதுவுமே வேண்டாம்.
முயலலோ வேண்டா; முனிவரை யானும்
இயல்பினார் என்பது இனத்தால் அறிக!
கயலியலும் கண்ணாய்! கரியரோ வேண்டா;
'அயலறியா அட்(டு)ஊணோ இல்'.
'இனத்தைக் கொண்டு தன்மையை அறிக' என்று சொல்லி, நல்லினம் சேர்தலின் இன்றியமையாமை வற்புறுத்தப்பட்டது. 'அயலறியா அட்டூணோ இல்' என்பது பழமொழி.
No comments:
Post a Comment