Translate

தமிழ் தொகுப்புகள் மற்றும் திருப்பாற்கடல் வலைத்தளங்களை ஆதரியுங்கள்

 தோழமை சொந்தங்களுக்கு பணிவான வணக்கங்கள்.

 எனது Yourskayveeyes.blogspot.com  வலைத்தளத்தினை தொடர்ந்து ஆதரித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன்.

 இந்த வலைத்தளம் பயனுள்ள ஒன்றாக, ஒரு அறிவு பெட்டகமாக, வழிகாட்டியாக அமைந்திட வேண்டும் என்பதற்காக மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறேன் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியது இல்லை.அதனை நன்கு அறிவீர்கள். நாள்தோறும் ஒரு முறையாவது இந்த வலைதளத்தை நீங்கள் பார்வையிட்டால் அது நிச்சயம் உங்களுக்கு பயனாக அமையும். எனக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். என்ன செய்வீர்களா?

 மேலும் என்னுடைய அன்பு மகன் இரு வலைத்தளங்களை தமிழிலேயே நடத்தி வருகின்றார். 

அதில் ஒன்று தமிழ் தொகுப்புகள் . அதன் வலைதள முகவரி thoguppukal.blogspot.com இதில் 50 ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்த எழுத்தாளர்கள் மற்றும் நாவல் ஆசிரியர்கள் எழுதிய கட்டுரை கதைகள் சிறு நாவல் என கிடைத்த கரிய பல இலக்கிய பதிப்புகளை பதிவிட்டு வருகிறார். வலைத்தளத்தின் இடது பக்கத்தை பார்த்தால் அது உங்களுக்கு புரியும். எத்தனை பெரிய எழுத்தாளர்கள், ஆளுமைகளின் படைப்புகள் இந்த வலைத்தளத்தில் இருக்கின்றன என்பதை உங்களால் உணர முடியும். 

அவரது மற்றொரு வலைதளம் திருப்பாற்கடல். அதன் வலைதள முகவரி thirupparkadal.blogspot.com முழுமையாக அதனை இறைபணியாக வைணவ சமயத்திற்கு தேவையான பல்வேறு தகவல்கள் ஆழ்வார் ஆச்சார்யர்களின் பாசுரங்கள் உரைகள், தத்துவங்கள் இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றை பற்றி விரிவான கட்டுரைகள் போன்றவற்றை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். 

தமிழ் இலக்கியம் படிக்க விரும்புகின்றவர்கள் தமிழ் தொகுப்புகள் வலைதளத்தையும்,வைணவம் குறித்து அறிய விரும்பும் நண்பர்கள் அதனையும், இரண்டினையும் விரும்புவர்கள் இரண்டினையும் நாள்தோறும் அவர் பதிவிட்டு வரும் பல்வேறு நல்ல தகவல்களை அறிந்து கொண்டு பயன்பெறுங்கள். 

இது விளம்பரம் அல்ல. வேண்டுகோள். விருப்பம் உள்ளவர்கள் அந்த வலைத்தளங்களையும் பார்த்தால் நான் மற்றும் எனது மகன் நடத்துகின்ற இந்த வலைத்தளங்களை நீங்கள் ஆதரித்து வருவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கும். 

நன்றியுடன்


Post a Comment

Previous Post Next Post