தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -8
இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
நாமும் பிறக்கிறோம்... இறைவனும் அவதாரம் செய்கிறான்; இருவர் பிறப்பும் ஒன்றாகாது. நாம், நம் கர்ம வசத்தால் பிறக்கிறோம்; நம் விருப்பப்படி பிறக்க இயலாது. இறைவன் கருணையால் அவதாரம் செய்கிறான். எங்கே, எப்படி தோன்ற வேண்டுமோ, அப்படித் தோன்றுகிறான். மலையிலிருந்து உருட்டியதால் ஒருவன் கீழே விழுகிறான்; மற்றொருவன், படிப்படியாக இறங்கி வருகிறான். முன்னவனைப் போல் நாம் பிறக்கிறோம்; பின்னவனைப் போல் இறைவன் வருகிறான். மேலேயிருந்து உருட்டி விட்டால் காயம் உண்டாகும் அல்லவா? நமக்கு இந்தக் காயம் (காயம் - உடம்பு, புண் ஆகிய இருபொருள்) ஊழ்வினை உருட்டி விட்டதால் வந்தது!
Post a Comment