இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
நாடகத்தில் மகாராஜா வருகிற ராஜபார்ட் சீன். மகாராஜாவுக்கு, ஜெயகோஷத்துடன் மாலையிட்டு வரவேற்பளித்தனர். எல்லாரும் தங்களை மறந்து, பரவசமாகித் தாங்களே மகாராஜாவும், யுவராஜாவும் என்று எண்ணியிருந்த தருணத்தில், ஒரு குழந்தை, "வீல்' என்று அழத் தொடங்கியது. அதன் தாயார் எவ்வளவோ, "மகராஜாவைப் பாரு... இளவரசனைப் பாரு!' என்று சொல்லிப் பார்த்தும், பலிக்கவில்லை. அந்தக் குழந்தைக்குக் கொஞ்சம் கூட மகா ராஜாவிடம் மரியாதை இல்லை என்று திண்ண மாய் விளங்கியது. ஏதோ கோபம் இருக்கும் என்று கூட விளங்கியது. இந்தக் குழந்தைக்கு வயதானால் பெரிய பொதுவுடமைக் காரனாகவோ, அராஜகனாகவோ ஆகும் என்று நினைத்தேன். அந்த சமயம், குழந்தையின் தாயார் அதன் வாயில், ஒரு பெப்பர் மின்ட்டைத் திணித்தாள்; உடனே, அழுகை நின்று விட்டது. "சரிதான்... இந்தக் குழந்தை பெரிதாகும் போழுது பெரிய அரசியல் வாதியாகும்!' என்ற தீர்மானத்துக்கு வந்தேன். அரசியல்வாதிகள் பலர் இப்படித் தானே முதலில் பலமான கூச்சல் போட்டு, ஏதாவது ஒரு பதவி கிடைத்ததும், "கம்' என்று அடங்கி விடுகிறனர்.
— கல்கியின் காமெடி பஜார் நூலிலிருந்து
True
ReplyDeleteSuper
ReplyDeleteதற்போது நம் தொழிற்சங்கத்திற்கும் பொருந்துமுங்களா? சார்
ReplyDeletePost a Comment