இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
அர்னாட் பென்னட் என்ற ஆங்கில நாவலாசிரியர், தன் அந்தரங்கச் செயலர் குறித்து, பிரமாதமாகப் புகழ்ந்துரைத்தார். பதிப்பகத்தார்கள், அந்தப் பெண்ணைச் சந்திக்க விரும் பினர். "உங்கள் செயல் திறனுக்கு என்ன காரணம்?' அந்தப் பெண்ணிடமே கேட்டனர். அவர், "என் முதலாளி தான் காரணம். ஒரு சிறிய செயலை நான் சரியாய் செய்தாலும், மனந்திறந்து பாராட்டுவார். என் குறைகளைப் பெரிதுபடுத்தாமல், என் நிறைகளையே நினைவூட்டுவார். எனவே, நான் குறைகளைக் குறைத்து, திறமைகளை வளர்த்துக் கொண்டேன்!' என்று சொன்னார்.
அங்கீகரிக்கப்படுகிற திறமை கள், விசுவரூபம் எடுக்கும்;
அலட்சியப்படுத்தப்படும் திறமைகள்,
முடங்கிக் கிடக்கும்.
நன்றி தினமலர் 13.6.2010
No comments:
Post a Comment