Translate

சங்கத்தமிழ் 4- ஆசாரக் கோவை - 50 : தவிர்வன சில

 சங்கத்தமிழ் 4- ஆசாரக் கோவை - பெருவாயின் முள்ளியார் -50
ஆசாரம் என்பது ஒழுக்கம் அல்லது நடத்தை. பெரியோர்கள் வாழ்ந்த வாழ்க்கை நெறியை பின்பற்றி ஒழுகுதல் ஒழுக்கம் ஆகும். 
ஆசாரக்கோவை. திருக்குறள் போல பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. 
இந்நூலை இயற்றியவர் பெருவாயில் முள்ளியார் எனும் புலவர். 

பாடல் 50 : தவிர்வன சில

பழியார் இழியார்; பலருள் உறங்கார்;
இசையாத நேர்ந்து கரவார்; இசைவின்றி
இல்லாரை எள்ளி இகழ்ந்துரையார்; தள்ளியும்
தாங்கருங் கேள்வி யவர்.

(தாங்கற்கரிய அறிவுடையவர்கள் - தாங்கருங் கேள்வி யவர்) பிறரைக் குறை கூறவோ (பழியார்), இழிவுபடுத்தவோ (இழியார்) மாட்டார்கள்; பலர் கூடியுள்ள இடத்தில் உறங்க மாட்டார்கள்; மனதிற்கு உடன்படாத ஒரு காரியத்திற்கு (இசையாத) ஒப்புக்கொண்டு (நேர்ந்து) (அதை) மறைக்க மாட்டார்கள் (கரவார்); தம்முடன் ஒத்துப் போகாத அல்லது செல்வம் இல்லாதவர்களை (இல்லாரை) இழிவாக எண்ணி (எள்ளி) இகழ்ந்து பேச மாட்டார்கள்; (இவர்கள்) துன்பங்கள் நேர்ந்தாலும் (தள்ளியும்) தாங்கிக்கொள்ளும் அரிய (பேரறிவுடையவர்கள்).
இந்தப் பாடல் ஒருவனின் சமூக நடத்தை, நேர்மை, தன்னடக்கம் மற்றும் பிறர் மீதான மரியாதை ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

நல்ல கேள்வி அறிவுடையவர் பலர் முன்னிலையில் ஒருவரை பழி சொல்லிப் பேசமாட்டார், இழித்தும் பேசமாட்டார்; பலர் முன்னிலையில் படுத்துறங்க மாட்டார். தம்மால் செய்ய முடியாததை செய்வேன் என்று பிறருக்கு வாக்குக் கொடுத்துப் பின்பு செய்யாமல் இருக்கமாட்டார்; இல்லாதவரைக் கேலிசெய்து இகழ்ந்துரைக்க மாட்டார்

(Those with immense knowledge) will not blame (Paḻiyār) or demean others; they will not sleep in the presence of many people; they will not agree to something against their will and then secretly conceal it; they will not scornfully  speak ill of  those who do not agree with them or the poor ; (and) they are those with profound knowledge who can endure even when pushed back or facing adversity .
This poem emphasizes an individual's social conduct, honesty, self-restraint, and respect for others.

Post a Comment

Previous Post Next Post