கடந்த 23 1 2025 அன்று இரவு 7 மணிக்கு ஒரு எதிர்பாராத சந்திப்பு தாம்பரம் கோட்ட அஞ்சல் நான்கின் கோட் ட செயலாளர் தோழர் பாஸ்கர் அவர்கள் தலைமையில் 22 தோழர்கள் தோழியர்கள் என்னுடைய இல்லத்திற்கு நேரில் வந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
குறிப்பாக பல பெண் தோழியர்கள் நமது பேரவை பயிற்சி முகாமின் வகுப்பில் கலந்து கொண்டு அவற்றில் மூலம் தபால்காரர்களாக தேர்ச்சி பெற்று தாம்பரம் கோட்டத்தில் பணியில் சேர்ந்திருப்பதாகவும் அதற்காக நேரடியாக நன்றி தெரிவித்திட வேண்டும் என்றும் தோழர் பாஸ்கர் அவர்களை வேண்டுகோள் விடுத்து எனது இல்லத்திற்கு வந்ததாக தெரிவித்தார்கள்.
பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் தாம்பரத்தை சார்ந்த பத்து தோழர் தோழியர் என மொத்தமாக என் முன்னால் நின்ற பொழுது சற்று தடுமாறிப் போனேன். நம்முடைய தூய்மையான இந்த தொண்டினால் என்னுடைய குழாமில் இருக்க கூடிய அனைத்து பயிற்சியாளர்களின் ஒத்துழைப்பினால் இன்று தமிழகத்தில் பல்வேறு தோழர் தோழர்கள் இலாக்கா பதவி உயர்வு பெற்று பெருமையுடன் செயல்படுகிறார்கள் என்பதை அறிகின்ற பொழுது என்னுடைய நன்றி எல்லாம் என்னுடைய பயிற்சி குழாமின் பயிற்சியாளர்களின் தொண்டினால் அவர்களின் தன்னலமற்ற செயல்பாட்டினால் என்பதை நினைத்து பெருமிதம் கொண்டு அவர்கள் நலமாக இருக்க வேண்டும். அவர்கள் நலமுடன் வாழ நான் வாழ்த்துகிறேன். மற்றும் என்னை நேரில் சந்தித்த அனைத்து தோழர் தோழியர்களும் விரைவில் அடுத்த கட்ட பதவி உயர்வினை பெற்று சிறப்புகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
Post a Comment