திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
• இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
• திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
• சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது
பெண் விழைந்து பின் செலினும், தன் செலவில் குண்றாமை;
கண் விழைந்து கையுறினும், காதல் பொருட்கு இன்மை;
மண் விழைந்து வாழ் நாள் மதியாமை; - இம் மூன்றும்
நுண் விழைந்த நூலவர் நோக்கு. . . . .[29]
• பெண் விழைந்து பின் செலினும், தன் செலவில் குண்றாமை: பெண்விரும்பி பின் தொடர்ந்தாலும், தன் எண்ணம் சிதறி விடக் கூடாது .
• கண் விழைந்து கையுறினும், காதல் பொருட்கு இன்மை: கண்களால் பார்த்து விரும்பினாலும், பொருள் பின் தொடர்ந்தால் பயனில்லை.
• மண் விழைந்து வாழ் நாள் மதியாமை: பூமியை விரும்பினாலும், வாழ்நாள் முழுவதும் அதில் இருக்க முடியாது. என்பதை உணராமல் இருந்தால் பயனில்லை ;
• பெண், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் விரும்பினாலும், அவை நிலையற்றவை என்பதை நுண்ணிய சிந்தனை கொண்ட அறிஞர்கள் கருத்தாகும்.
தன்னைச் சேர விரும்பும் பெண்ணைச் சேராமையும், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தலும், வாழ்கின்ற காலத்தை மதிக்காமல் இருத்தலும் கற்றவர்களின் கருத்தாகும்.
Yes
ReplyDeletePost a Comment