Translate

Google XR - எதிர்கால தொழில்நுட்பம் - நன்மையா? தீமையா?

ஆம், சமீபத்தில் Googleன் குவாண்டம் சிப் வெளியிடும் போது இந்த Google XR பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டனர் கூகுள் நிறுவனத்தினர்


இது என்ன XR எந்த வகையில் நமக்கு இது உதவிடும் என பார்ப்போமா? 

முதலில் இந்த XR என்றால் என்ன என்று பார்ப்போம். XR என்பது Extended Reality. இதன் பேரிலேயே புரிந்து கொள்ளலாம். நீட்டிக்கப்பட்ட அல்லது மேலும் மெருகூற்றப்பட்ட உண்மையான நிகழ்வு என்று எடுத்துக் கொள்ளலாம். நிஜம் ஆனால் நிஜமல்ல. நிஜம் போன்று  இருக்கும். இதுதான் ஒரு வரியில் சொல்வதென்றால். 

Virtual reality பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிறோம். பெரிதான முற்றிலும் மூடப்பட்ட ஒரு கண்ணாடியை போட்டுக் கொண்டு படம் பார்க்கும் போதும், அதிலேயே உள்ள விளையாட்டுக்களை விளையாடும் போதும் நாம் அதனுள்ளேயே பயணிப்பது போன்ற ஒரு மாயையை அது உருவாக்கும். நமக்கும் நல்ல ஒரு அனுபவம்  கிடைக்கும். இது ஏற்கனவே  10 வருடங்களுக்கு முன்னர் வெளியானது தான். நம் அருகில் உள்ள ஷாப்பிங் மால்களுக்கு செல்லும் போது சில கடைகளில் இதில் விளையாடுவதற்கு என வாடகைக்கும் கொடுக்கின்றனர். 


தற்போது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவினை இந்த Virtual Reality உடன் இணைத்தால் கிடைப்பது XR. இது Google நிறுவனத்தால் Google XR என்ற பெயரில் ஒரு Operating System விரைவில் வெளியிட உள்ளனர். Samsung மற்றும் Qualcom உடன் சேர்ந்து இதனை வழங்க உள்ளனர். 

ஏற்கனவே Meta அது வேறு யாருமில்லை நமது FaceBook நிறுவனத்தினர் தான் Meta Verse என்ற பெயரில் Virtual Reality ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.  Web 3.0வுடன் இணைத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏகப்பட்ட நிறுவனங்களும் இந்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். 


Apple நிறுவனத்தினர் Apple vision pro என்ற device Feb 2024ல் வெளியிட்டனர். ஆனால் அது Mixed reality என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. Virtual மற்றும் நேரடியான அனுபவங்களை கொடுக்கும் ஒரு device அது. 

இதற்கு முன்னர் Google நிறுவனமே 2014ல் Card Board என்ற virtual reality app வெளியிட்டுள்ளனர். அது நம் Smart Phone ல் நிறுவி அதற்கான Headsetவுடன் உபயோகித்துப் பார்க்கலாம். 

இதுவரை இரண்டு விதமான reality கண்டுபிடிப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. Virtual Reality மற்றும் Augmented Reality

Virtual Realityல் முழுவதும் Graphics Simulation வைத்து நம்மை அந்தச் சூழலில் இருக்குமாறு ஒரு மாயையை உருவாக்குவார்கள். அனைத்தும் நம்மைச் சுற்றி நடப்பது போன்றே தோன்றும். முன்னர் 3D திரைப்படம் வெளியாகும் அதனை நாம் திரையரங்குகளில் பார்க்கும் போது காட்சிகளில் உள்ள பொருட்கள் எல்லாம் நமக்கு அருகில் வருவது போன்று தோற்றமளிக்கும். அதற்கென்று கொடுக்கப்பட்டுள்ள கண்ணாடி போட்டு பார்த்தால்  தான் வித்தியாசம் தெரியும். 

இரண்டாவது Augmented Reality, அது நம்மையே, முன்னரே உருவாக்கப்பட்ட அதனுடைய Graphics Presetக்கு model ஆக வைத்து உருவாக்குவது. இதற்கு சரியான உதாரணம் Snapshot app மற்றும் சில கடைகளில் டிரஸ் காஸ்ட்யூம் இவைகளை நமக்கு வைத்து பார்த்து எது நன்றாக உள்ளது என்று நம்மை வைத்தே மாற்றி மாற்றி காண்பித்து செலக்ட் செய்ய சொல்வார்கள். 

இந்த Snapshat appல் நம் வீட்டில் உள்ள சுட்டிப் பசங்க முகத்தில் காதை பெரிதாக்குவது போன்று, பலவிதமான மேக்கப் செய்வது, நம் முகத்தை குதிரை முகமாக மாற்றுவது, குரங்கு போன்று மாற்றுவது என இதில் அடங்கும். அதை விளையாட்டாக செய்து Share செய்வார்கள். இவையெல்லாம் augmented reality. 


ஆனால் இந்த XR வேற வேற வேற மாதிரி, Google Gemini மற்றும் இன்ன பிற கூகுள் ஆப்களை பயன்படுத்தி நமக்கு மிகவும் உதவும் விதமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். 

இது பார்ப்பதற்கு வெறும் மூக்குக் கண்ணாடி போட்டிருப்பதுப் போன்று தான் இருக்கும். இரண்டு காதில் மாட்டிக் கொள்ளும்போது அதில் உள்ள Speakerகள் நமக்கு அவைகளின் சத்தத்தை அதாவது அதன் குரலை கேட்க உதவிடும், மூக்கில் மாட்டும் போது அதில் உள்ள கேமரா நமக்கு வழிகாட்டியாகவும், எதிரே உள்ளவர்களுடன் உரையாடுவதற்கு அவரின் மொழியில் பேசுவதற்கும் உதவிடும். 


கண்ணாடியில் நமக்கு தொடர்ந்து Text காண்பித்துக் கொண்டும், Google mapல் நாம் தேர்ந்தெடுக்கும் இடத்திற்கான வழி காட்டவும் பயன்படும். இதெல்லாம் எதிர்காலத்தில் என்று கூறுகிறார்கள். 


மேலும் சிறப்பான அம்சங்களும் உள்ளனவாம் இந்த google XRல்.  இவையனைத்தும் Softwareல். இந்த Software யார் பயன்படுத்த, யார் நினைக்கிறார்களோ, அதற்கான devices யார் தயாரிக்கிறார்களோ அவர்களிடம் இதனை கொடுப்பார்கள். நம் Smart Phone-ல்  உள்ள Android OS போன்று. அதனால் ஏகப்பட்ட நிறுவனங்கள் புதிது புதிதாக devices உருவாக்குவார்கள். 


எதிர்கால தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து நமக்கு  நன்மை மட்டுமே ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வைத்து ஒரு சின்ன எச்சரிக்கையுடன் இதனை வரவேற்போம். 

-S.B.

Post a Comment

Previous Post Next Post