Translate

க்ரிப்டோ கரன்சி - பயனும் ஆபத்தும்

பிட்காயின், டோஜ், மற்றும் பல பெயர்களில் உலவி வரும் க்ரிப்டோ கரன்சி, மெய்நிகர் நாணயம் என்று தமிழில் அழைக்கப்படும் ஒரு காயின்.  பெயருக்கேற்றார் போல் உண்மையான நாணயம் அல்ல. உண்மையைப் போன்று தோற்றமளிக்கும் ஒரு நாணயம். அதைப் பற்றி சற்று பார்ப்போம். 


90களில் கம்ப்யூட்டர்  வந்த புதிதில் ஒரு விளையாட்டு இருக்கும். அதன் பெயர் Hercules.  ஒரு கிரேக்க மாவீரன் அவன். அந்த நாட்டுடைய இளவரசியை வேறொரு நாட்டில் கடத்தி சிறை வைத்திருப்பான்  மற்றொரு தளபதி, இளவரசியை காப்பாற்றுவதற்காக நிறைய தடங்கல்களைத் தாண்டி ஓடிக் கொண்டேயிருப்பான் நம் மாவீரன் ஹெர்குலஸ்.  சில சமயங்களில் வில்லன் குரூப்பிடம் மாட்டிக் கொள்வான். சில சமயம் பயங்கரமாக சண்டையிடுவான். அவனை அதிலிருந்து காப்பாற்றி வெளியேக் கொண்டு வர நாம் சில காயின்களை அதாவது நாணயத்தை கொடுக்க வேண்டும். அவனை ஓட வைப்பதும் நாம் தான் வில்லன்களிடம் சிக்க வைப்பதும் நாம் தான். 


இந்த விளையாட்டில் அவன் ஓடும் வழியெல்லாம் சிதறி கிடைக்கும் காயின்களை பொறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி காயின்கள் ஏதுமில்லையென்றால் நாம் நம் சொந்தப் பணத்தை அதாவது உண்மையான பணத்தைக் கொடுத்து காயின்களை வாங்க வேண்டும். அப்படி விளையாட்டின் மோகத்தில் நிறைய காயின்கள் வாங்குவோம் விடுவோம். அதேப் போன்று அச்சிலும் வடிவத்திலும் எங்குமே இல்லாத ஒரு காயினுக்கு, பிட்காயினுக்கு, ஒரு நாணயத்துக்கு அதாவது Crypto Currencyக்கு நம்மிடம் கையில் உள்ள காயினை அதாவது உண்மையான பணத்தைக் கொடுத்து அந்த மெய்நிகர் நாணயத்தை வாங்கி நமது வாலட்டில் அதாவது பர்சில் வைத்து, அது அதன் மதிப்பு ஏறும் ஏறும் என்று எதிர்பார்த்து காத்திருப்பது தான் இந்த க்ரிப்டோ கரன்சி சந்தை. பங்குச் சந்தை போன்று தோற்றமளித்தாலும் உண்மையில் அல்ல. 


மொத்தம் ஒரு காயின் அல்ல கிட்டத்தட்ட 25000 காயின்கள் உள்ளன. கொஞ்சம் கம்ப்யூட்டர் கோடிங், பணம் மற்றும் அறிவிருந்தால் நாமே நமக்கான சொந்தக் காயினை உருவாக்கலாம். என் உறவினர் ஒருவர் தன் மகளின் பெயரிலே ஒரு காயின் உருவாக்கியதாக ஞாபகம். தற்சமயம் வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. 


உலகச் சந்தையில் ஒவ்வொரு நாடும் அவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட நாணயங்களை வைத்திருப்பார்கள். பண்டங்களை அவர்களுக்குள் பரிமாற்ற சர்வதேச அளவில் அமெரிக்காவின் டாலரை பொதுவான ஒரு பணமாக உபயோகப் படுத்துகிறோம். தற்போது சில நாடுகள் நமது ரூபாயினையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அது ஒரு நல்ல முன்னேற்றம் தான். இதே போன்று அனைத்து நாடுகளும் தங்கள் சொந்தப் பணத்தை பரிமாற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இது நாடுகளுக்குள் நடக்கும் விஷயம். நமக்குள் நாம் மாற்றிக் கொள்வதற்கு அதற்குத் தான் இந்த கிரிப்டோ கரன்சி. ஏன் என்ற கேள்வி எழும். அதற்கு தான் Forex இருக்கிறதே என்று அது நியாயந்தானே. 


இந்த க்ரிப்டோ கரன்சிக்கென்று ஏகப்பட்ட Exchanges உலகளாவிய அளவில் இருக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒன்றை நாம் தேர்ந்தெடுத்து நம் கையில் உள்ள உண்மையான பணத்தை மாற்றி விருப்பப்படும் காயின்களை வாங்கி அதற்குரிய வாலட்களில் வைத்துக் கொள்ளலாம். 


க்ரிப்டோ காயின்கள் ஒரு அளவிற்குத்தான் வெளியிடுவார்கள். அதற்கு ஆகும் செலவு அதிகம். அதனை மைனிங் என்பார்கள். சற்று பெரிய அளவில் கிராபிக்ஸ் கார்டு மற்றும் இன்டெர்நெட் இருந்தால் நாமும் காயின்களை தயாரிக்கலாம். அதாவது மைனிங் செய்யலாம்.


உலகளாவிய அளவில் நிறைய மக்கள் அவற்றை வாங்கி வைப்பதால் அந்த நாணயங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். ஏற்கனவே பிட்காயின் அந்த நிலைமையில் தான் உள்ளது. அதனால் தான் ஒரு பிட்காயின் 85லட்சத்திற்கு விற்கப்படுகிறது. பலர் அதனை தேக்கி வைப்பார்கள். அதனை HODL என்பார்கள். ஆங்கிலத்தின் HOLD தான் அது. சற்று மாற்றி அழைப்பார்கள். உடன் அதன் விற்பனை விலை ஏற ஆரம்பிக்கும் இது தான் இதில் உள்ள விளையாட்டு. இதில் எலான் மஸ்க் போன்ற பெரிய தலைகள் நிறையவே விளையாடுவார்கள். 


இதற்கு பின் உள்ள டெக்னாலஜி அதாவது Block Chain Technology மிகவும் உயர்ந்தது பாதுகாப்பானது. இந்திய அரசாங்கமும் இதனை பயன்படுத்தி digital Currency தயாரிப்போம் என்றார்கள். பின்னாளில் உபயோகப்படலாம். இல்லாமலும் போகலாம்.


இந்த கிரிப்டோ கரன்சிகள் தீயவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் கைகளில் போனால் விளைவு மிக மோசம். அதனால் தான் இந்தியா இதனை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவில்லை. 


கஷ்டப்பட்டு நாம் சம்பாதிக்கும் உண்மையான பணம் பார்த்து முதலீடு செய்யுங்கள். மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.


- S.B.


Post a Comment

Previous Post Next Post