Translate

பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றால், அதற் கான காரணங்களுள் இவற்றில் ஒன்று

ஒரு நிறுவனத்தில், ஒருவனுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றால், அதற் கான காரணங்களுள் இவற்றில் ஒன்று:

*அவன் மணி பார்த்து வேலை செய்கிறான்.

*அவன் எப்போதும் புலம்பல் கேசாக இருப்பான்.

*அவன் எப்போதும் முன்னோடியாக இருக்கவில்லை.

* அவன் ரத்தத்தில் உறுதியில்லை.

*அவன் தகுதிக்கு மேல் தன்னை நினைத்துக் கொள்வான்.

*அவன் தன் மீதே, நம்பிக்கையின்றி இருந்தான்.

*அவன் அடுத்த நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதில்லை.

*அவன் தன்னுடைய மனதை தொழிலில் வைக்கவில்லை.

*அவன் தன்னுடைய தவறுகளிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை.

*அவன் தன்னுடைய நண்பர்களைத் தன்னை விட தரம் குறைந்தவர்களிடையே தேர்ந் தெடுத்தான்.

*அவன் இரண்டாம் தர மனிதனாக இருப்பதில் திருப்தியடைந்தான்.

*அவன் தன்னுடைய திறமைகளை அரைகுறையாக, வேலை செய்வதின் மூலம் அழித்துக் கொண்டான்.

*அவன் தன்னுடைய சுய தீர்மானத்தில் செயல் பட்டதேயில்லை. அவன் எதையும், எப்படி என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.

*அவன் கடின உழைப்பை அரைகுறை வேலையில் ஈடுகட்டினான். அவன் எப்போதும், முன்னேறுவதை விட, பொழுது போக்குகளில் தான் ஆர்வம் காட்டுவான்.

* அரைகுறை வேலை செய்து பழகியதால், அவனுடைய உயர்ந்த கொள்கைகள் தளர்ந்தன.

*அவன் எப்போதும் தெரிந்து கொள்ள வில்லை. அவனுடைய சம்பளத்தின் மிகச் சிறந்த பகுதி, அவனுடைய சம்பள உறையில் இல்லை என்று!

— கண்ணதாசன் பதிப்பக வெளியீடான "உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்!' நூலிலிருந்து....

Post a Comment

Previous Post Next Post