Translate

53. *'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்'*

கி.வா.ஜ அவர்களின் சிலேடை நகைச்சுவை

கி வா ஜ ஒருமுறை தொடர்ச்சியாக விழாக்களில் கலந்து கொண்டதால் இருமல் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப் பட்டார். அதற்காக விழாக்குழுவினர் அவருக்கு cough syrup ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.

கி வா ஜ அவர்கள் இதைத்தானா கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் "சிறப்பு" என்கிறார்கள் என்று கேட்டார்.

* பல்லாண்டுகளுக்கு முன் சென்னை வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒரு நாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டனர்.

பாராட்டுரை சொல்ல வந்த கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, *'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்'* என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.

அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, *"நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பேனாவால் கௌரவிக்கிறார்"* என்றதும் மறுபடியும் கைதட்டல் வானைப் பிளந்தது

Post a Comment

Previous Post Next Post