கி.வா.ஜ அவர்களின் சிலேடை நகைச்சுவை
* ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. கி.வா.ஜ-வும் அதில் கலந்துகொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க,
கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு,
கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார்.
“அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்” என்றார் முதலாளி.
*ஓகோ! கடை சிப்-பந்திக்குக் கடைசிப் பந்தியா?!”* என்று கேட்டார் கி.வா.ஜ.
• ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.
“மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,
*“மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!”* என்றார் கி.வா.ஜ.
கிவாஜ சிலேடையில் உச்சமான ஒன்று!!
* அவரை அதே போல மடக்கிய ஒரு பெண் உண்டு தெரியுமா? -
ஒரு பெண் அவரை தங்கள் கூட்டத்தில் பேச அழைத்தாள்.
கிவாஜ - *இன்னிக்கு வேணாமே!* *தொண்டை கம்மியிருக்கு...* என்றார்..
அந்தப் பெண் சொன்னாள் - *பரவாயில்லை, கம்மல் பிரகாசிக்கவே செய்யும்.*
* ஒரு தடவை அவருக்கு போர்த்திய பொன்னாடை கிழிந்து இருந்தது...
அதற்கு அவரின் கமெண்ட்: *"இந்த பொன்னாடையில் பூ இருக்கிறது...பழம் இருக்கிறது...பிஞ்சும் இருக்கிறது...*
Post a Comment