ஒருமுறை, அரசினரால் எழுதப் பட்ட பாட நூல்களைத் திருத்தி அமைக்க, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும், இன்னும் சில பெரியோர் களும், அவர்களுக்கு உதவியாக சிலரும் அமர்த்தப்பட்டிருந்தனர்.
ஒருநாள் அவர்கள் எடுத்துக் கொண்ட புத்தகத்தில், "கிளி' எனும் பாடம் வந்தது. தலைப்பில் கிளியின் படமும் வரையப் பட்டிருந்தது. விநாயகம் பிள்ளை, எல்லா ரையும் புத்தகத்தை மூடும்படி செய்துவிட்டு, "கிளிக்கு விரல் முன்னே எத்தனை? பின்னே எத்தனை?' என்று கேட்டார்.
"முன்னே மூன்று விரல்; பின்னே ஒரு விரல்...' என்றனர் சில இளைஞர்கள். மற்றவர்களும், அதுவே சரி என்றனர். உடனே விநாயகம் பிள்ளை, எல்லாரையும் புத்தகத்தைத் திறந்து பார்க்கும்படி கூறினார். படத்தில் உள்ள கிளியும், முன்னே மூன்று விரல்களைக் காட்டிக் கொண்டு தான் இருந்தது.
Post a Comment