Translate

தமிழ் இலக்கியத்தில் என்னை ஆக்கிரமித்தது

 தமிழ் இலக்கியத்தில் என்னை ஆக்கிரமித்தது 

1. பாரதியின் எண்ணங்களிலிருந்து 

சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவிற்கு போயிருந்தானாம். அப்பொழுது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக்கொண்டிருக்கையிலே அவள் "உங்களுடைய  சீன தேசத்தில் கல்யாணமாகும் வரை மணப்பெண் தனது புருஷன் முகத்தை பார்ப்பது வழக்கம் இல்லையாமே? மெய்தானே  என்று கேட்டாள். அதற்கு ராஜகுமாரன் "உங்கள் தேசத்தில் சில பெண்கள் கல்யாணமான பிறகு தனது புருஷன் முகத்தை பார்ப்பதில்லை என்று கேள்விப்படுகிறேன். அது மெய்தானே என்றான்.

***

கணவனும் மனைவியுமாக இருக்கும் ஒரு சிறிய குடும்பம். ஒரு நாள் இரவு மனைவி சமைத்துக் கொண்டு இருக்கிறாள். அவளு க்கு உடல்நிலை சரியில்லாததால் கணவனுக்கு மட்டும் கொஞ்சமாக சமைக்கிறாள். கணவனோ அன்றிரவு தான் விரதம் இருக்கப் போவதாக கூறிவிடுகிறான். மனைவி சமைப்பதை நிறுத்தவில்லை. மறுநாள் காலை வேலைக்காரிக்கு ஆகட்டும் என்று தொடர்ந்து சமைத்து முடிக்கிறாள். "அதுபோலவே, கர்மயோகி தான் ஒரு செயல் செய்யத் தொடங்கி இடையிலே அதிக தனக்கு பயனில்லை என்று தோன்றினால்  அதை அப்படியே நிறுத்தி விடமாட்டான்.  பிறருக்கு பயன் தரும் என்பதை கொண்டு, தான் எடுத்த வேலையை முடித்த பிறகு வேறு காரியம் தொடங்குவான்" என்று முத்தாய்ப்பு வைத்து கதைக்கு (உதிரிப்பூக்கள்) முற்றுப்புள்ளி வைக்கிறார் பாரதி.

***

மற்றொரு உதிரிப்பூ "காக்காய் பார்லிமெண்ட்" என்பது இதன் பெயர். முடியரசானாலும் குடியரசானாலும் அரசியல் தலைவனின்  தொழில் மக்களை சுரண்டுவதுதான் என்பதை இக்கதையில் பாரதியார் காட்ட வருகிறார்.

சுமார் 40 காக்காய்கள். ஒரு கிழக்காக்கை ருஷ்யாவில் ஜார் மன்னன் அடித்து துரத்தப்பட்டதையும் அவனுக்கு இருந்த சொத்துக்களையும் விவரிக்கிறது. திருவாங்கூர் மகாராஜா மைசூர் மகாராஜா ஆகியவர்களுக்கு மக்கள் கொடுத்துள்ள சொத்துக்கள் பற்றியும் கூறுகிறது. கடைசியில் தான் மட்டுமே சும்மா ஆள்வதாகவும் மறுநாள் முதல் ஒவ்வொரு காக்கையும் அன்றாடம் கிடைக்கும் உணவில் ஆறில் ஒரு பங்கு தனக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறது. இதைக் கேட்டுக் கொண்டிருந்த மந்திரி காக்கைகள் தங்களுக்கும் பங்கு கேட்பதாக கதை முடிகிறது. அரசியல் என்பது பொதுமக்களை சுரண்டத்தான் என்ற நடைமுறை வாழ்க்கை உண்மையை இக்கதையில் மணம் ஆகிறது.

What occupied me in Tamil literature

1. From Bharathi's thoughts

A prince from China had gone to America. At that time, the wife of a nobleman was talking to a Chinese guest when she asked, "Isn't it customary in your country of China for a bride to see her husband's face until the wedding? Is that true?" To this the prince said, "I hear that some women in your country do not see their husband's face after marriage. That is true."

***

A small family consisting of a husband and wife. One night, the wife was cooking. Since she was not feeling well, she cooked a little for her husband. The husband, however, said that he was going to fast that night. The wife did not stop cooking. The next morning, she continued cooking, saying that she would let the maid do it. "Likewise, if a Karmayogi starts doing something and later finds that it is useless to him, he will not stop it. He will start another task after completing the task he has taken, knowing that it will benefit others," concludes Bharathi, concluding the story (Uthiripookkal).

***

Another Uthiripookkal is called "Cuckoo Parliament". In this story, Bharathiar shows that a political leader's business, whether a monarchy or a republic, is to exploit the people.

About 40 Cuckoos. An Eastern Cuckoo describes the beating and expulsion of the Jahr in Russia and the properties he had. It also talks about the properties given by the people to the Maharaja of Travancore and the Maharaja of Mysore. In the end, he says that he alone will rule idly and from the next day onwards, each crow should give him one-sixth of the daily food he gets. The story ends with the minister crows who were listening to this asking for their share too. This story embodies the practical truth that politics is about exploiting the public.


1 Comments

  1. Viswanathan S TrivandrumNovember 28, 2024 at 7:20 PM

    I have read the Tamil version.It is so interesting and thought provoking.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post