Translate

44. அது ஆத்திரத்தில் எடுத்த அவசர முடிவு.

 தி.மு.., ஆட்சிக்கு வரும் முன், காங்கிரசை எதிர்த்து சந்தித்த பொதுத் தேர்தல் அது. போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி இறந்த ஒரு தோழரின் விதவை மனைவி, "கூலி உயர்வு கேட்டான் அத்தான்; குண்டடிபட்டு செத்தான்...' என்று அழுவது போல, பல நூறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

தி.மு..,வை எதிர்த்து பிரசாரம் செய்தார் .வெ.ரா., ஒரு கூட்டத்தில், "பிரச்னைக்கு வழி சொல்லாமல், அரசாங் கம் தாலியை அறுத்து விட்டது என்று சொல்லுகிறாயே... அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தால், மறு தாலி போடு வாயா?' என்று கடுமையாகக் கேட்டார்.

வேறெங்கும் இந்தப் பிரச்னைக்குப் பதில் சொல்லாத அண்ணாதுரை, பிரமாண்ட மான ஈரோடு கூட்டத்தில் பதில் சொன்னார்...

"மறு தாலி போடுவாயா என் கிறார், என் தலைவர் .வெ.ரா.மறு தாலி போட மாட்டான் அண்ணாதுரை; அப்படியே போட்டாலும், என்னுடைய தலைவர், .வெ.ரா.,வைப் போல், அவரசப்பட்டு போட மாட்டான்...' என்றார்.

அண்ணாதுரையின் பதிலைப் படித்த .வெ.ரா., கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, பிறகு லேசாகக் சிரித்தார். "உம்... அது ஆத்திரத்தில் எடுத்த அவசர முடிவு...' என்றார். தன் இரண்டாவது திருமணத்தைக் குறிப்பிட்டு!

திருச்சி செல்வேந்திரன் எழுதிய,
" .வெ.ரா., கலைஞருடன் கார் பயணங்களில்' நூலிலிருந்து...

பிடித்தது -44

இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.

Post a Comment

Previous Post Next Post