அக்பர் பாதுஷாவுக்கு தம் ஆஸ்தான வித்வான் தான்சேனிடம் மிகுந்த மதிப்பு உண்டு. அவரது இசைப் புலமையை மிகவும் கொண்டாடினார்.
ஒருநாள் அவர் தான்சேனிடம், "உன் குருவை ஒருநாள் இங்கே வந்து பாடச் சொல்ல முடியுமா?' என்று கேட்ட போது, "அவர் இங்கே வரமாட்டார்; நாம் தான் அங்கே போக வேண்டும்...' என்று கூறினார் தான்சேன். தாம் பேரரசர் என்ற முறையில் இல்லாமல், சாதாரண உடுப்பு அணிந்து, தான்சேனுடன் நகருக்கு வெளியே அந்தப் பாடகரின் குரு பாவா ஹரிதாஸ் என்பவர் குடியிருந்த குடிலுக்குப் போனார் அக்பர். அவரது இசையைக் கேட்டு மெய்மறந்து இருந்தார்.
சில நாட்களுக்குப் பின், ஒருநாள் தான்சேன் பாடிய போது அக்பர், "என்ன தான்சேன்... உன்னுடைய குரு எவ்வளவு நன்றாக பாடுகிறார். அவருடைய பாட்டுடன் ஒப்பிட்டால் உன் பாட்டு சப்பென்றிருக்கிறதே!' என்றார். "பிரபுவே... நான் உங்களுக்காகப் பாடுகிறேன்; அவர், பகவானுக்காகப் பாடுகிறார். இதுதான் காரணம்!' என்றார் தான்சேன்.
பிடித்தது -42
இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
Post a Comment