Translate

"நீங்கள் செய்த காரியம், என் தண்டனையின் கடுமையை அதிகரித்துவிட்டது

சிறையில் இருக்கும் போதெல்லாம், சிறை விதிக்கு கட்டுபட்டு தான் நடந்து கொள்வார் காந்திஜி; எந்த ஒரு சிறிய விதியையும் மீற மாட்டார். அவர் சிறையில் இருந்த அந்த சந்தர்ப்பத்தில், செய்தித்தாள் களைப் படிக்க அவர் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே, செய்தித்தாள்கள் அவருக்கு கொடுக்கப் படுவதில்லை.

அந்த ஜெயிலுக்கு வந்து போகும் டாக்டர் ஒருவர், பத்திரிகையில் வெளியாகியுள்ள ஒரு செய்தி, காந்தியின் கவனத் திற்கு கட்டாயம் வர வேண்டும் என்று எண்ணினார். ஆகவே, தான் கொண்டு வந்திருந்த செய்தித் தாள்களை, மறந்து வைத்து விட்டுப் போவதைப் போல, காந்தியின் அறையிலேயே, அதுவும் அவருடைய படுக்கையின் மீதே வைத்து விட்டுப் போய் விட்டார். மறுநாள், காந்திஜியைப் பார்க்க டாக்டர் வந்த போது, அந்த செய்தித்தாள், காந்திஜியின் படுக்கை மீது, அவர் விட்டுவிட்டுப் போன நிலையில் அப்படியே இருப்பதைப் பார்த்தார். படுக்கையில் அமராமல், அறையில் ஒரு மூலையில் சாய்ந்து உட்கார்ந்திருந்த காந்திஜி, "நீங்கள் செய்த காரியம், என் தண்டனையின் கடுமையை அதிகரித்துவிட்டது. இரவெல்லாம் படுக்கையில் படுக்க முடியாமல், இந்த மூலையிலேயே உட்கார்ந்து கழிக்க வேண்டியதாயிற்று!என்றார்.     

தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -36

இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.


Post a Comment

Previous Post Next Post