Ministry of Personnel, Public Grievances & Pensions F.No 31011/06/2023-Estt.(A-IV) dt 29.03.2023:
Queries raised, whether to allow leave encashment or not in cases
where the Govt employees undertake journeys on private vehicles in areas
connected by public transport or the Govt servant himself decides to forgo hi
claim resulting in ‘Nil’ claim on journeys performed have been decided in the
above said orders.
It is decided that it would not be appropriate to deny the
encashment, provided that:
Prior intimation about his intention to avail LTC has been given by
the Govt servant in advance to the Department and gets the leave sanctioned
before the commencement of journey.
Govt servant submitted request for leave encashment before the
commencement of journey.
Govt servant gives a self declaration that he has actually travelled
to the declared place of visit and is not claiming the fare reimbursement for
the entire LTC journey
It is further clarified that, it is not required to forgo the
fare-reimbursement for LTC journey as per prevailing instructions:
Journey on LTC is made by Taxi, auto rickshaw etc, only between
places not connected by rail and these modes operate from point to point with
the specific approval of the State Govt
concerned on a regular basis to ply as public carriers.
When travels up to the nearest airport/railway station / bus
terminal by authorised mode of transport and undertakes the rest of the journey
to the declared place of visit by private transport / own arrangement limited
up to 200 km to and fro;
Head of Dept allows use of own / hired taxi for an LTC journey on
account of disability of the govt servant or dependant family members as per
the extant instructions.
Within the same block, encashment is restricted to one occasion,
when the govt servant and the family members avails LTC separately...
Ministry of Personnel, Public Grievances & Pensions F.No
31011/06/2023-Estt.(A-IV) dt 29.03.2023:
பொது போக்குவரத்து உள்ள இடங்களில், அதனை
விடுத்து தனியார் வாகனங்களில் பயணம் மேற்கொண்டு
LTC சலுகையினை அனுபவிக்கும் போதும், ஊழியரே அந்த பயணச் செலவினை உரிமை கோர
வேண்டாம் என்று முடிவு செய்யும் போதும், LTC ன் போது அனுமதிக்கப்படும் விடுப்பினை
பணமாக்கும் சலுகையை அனுமதிக்கலாமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்த ஆணையில்
விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
LTC ன்
போது அனுமதிக்கப்படும் விடுப்பினை பணமாக்கும் சலுகையை மேற்கண்ட நேரங்களில்
மறுப்பது, கீழ்கண்ட
நடைமுறைகளை பின்பற்றியிருப்பின் சரியாகாது
என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தனது LTC பயணத்தை பற்றி முன்னரே தனது துறைக்கு
தகவல் கொடுத்து, அதற்கான விடுப்பினையும் பயணம் துவங்கும் முன்னரே பெற்ற ஊழியர்,
விடுப்பினை பணமாக்க தனது விண்ணப்பத்தினை பயணம்
துவங்கும் முன்னரே சமர்ப்பித்த ஊழியர்,
ஊழியர் தான் LTC பயணத்தில் செல்வதாக அறிவித்த
இடத்திற்கு சென்றதாகவும், அந்த பயணத்திற்கான மொத்தக் கட்டணத்தையும் தான்
உரிமை கோர போவதில்லை என உறுதிமொழி அளிக்கும் போதும்.
நடைமுறையில் இருக்கும் அறிவுருத்தல்களை பின்பற்றி, மேற்கொள்ளப்படும்
LTC பயணத்திற்கான
கட்டணத்தை கீழ்கண்ட நேரங்களில் உரிமை கோராமல் விடுவிட வேண்டிய அவசியமில்லை எனவும்
தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
LTC பயணத்தின்
போது ரயில் மூலம் இணைக்கப்படாத இடங்களுக்கு இடையே, அந்தந்த மாநில அரசுகளால் ஒரு
முனையிலிருந்து மற்றொரு முனைக்கு பொது போக்குவரத்தாக அனுமதிக்கப்பட்டிருக்கும் Taxi, auto rickshaw போன்றவை
பயண்படுத்தி மேற்கொள்ளப்படும் பயணங்களின் போதும்,
LTC பயணத்தில்
அறிவிக்கப்பட்ட பயண இலக்கிற்கு அருகாமையில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையம் விமான நிலையம் வரை அனுமதிக்கப்பட்ட
போக்குவரத்தில் பயணித்து அதன் பின் பயண இலக்கு வரை போய்வர அதிகபட்சமாக 200 km வரை
சொந்த வாகனங்களிலோ / தனியார் வாகனங்களிலோ
பயணம் மேற்கொள்ளும் போதும்,
ஊழியர் அல்லது அவர் குடும்ப உறுப்பினரின் ஊணம்
கருதி துறை தலைவரால் அனுமதிக்கப்பட்டு
சொந்த வாகனங்களிலோ / தனியார் வாகனங்களிலோ
பயணம் மேற்கொள்ளும் போதும்..
ஒரே blockல், வெவ்வேறு நேரங்களில் ஊழியர் மற்றும் அவர்தம் குடும்பத்தினரால் மேற்கொள்ளப்படும் LTC பயணங்களில் ஒரு முறை மட்டுமே விடுப்பினை பணமாக்க அனுமதிக்கப்படும்...
Post a Comment