ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜகந்நாதனை, சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார் கி.வா.ஜ.
கூட்டம் முடிந்த பின், கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு, அவரிடம் கொடுத்தனர்.
அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ., "என்னை, "தலைவனாக' தலைமை தாங்க அழைத்து, "பையனாக' அனுப்புகிறீர்களே?' என்றார்.
அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.
Dinamalar 18.7.2010
தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -20
இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
Post a Comment