Translate

சே... என்ன வாழ்க்கை!

"தட்டுங்கள் திறக்கப்படும்' படம் எடுத்தேன். தயாரிப்பாளர்கள் நல்ல விலைக்கு படத்தை விற்றனர்.

படத்தின் நீளம், கொஞ்சம் அதிகமாகி விடவே, சர்சார்ஜ் (வரி) அதிகம் கட்ட வேண்டி வரும் என்று, நீளத்தை குறைத்துவிட முடிவு செய்தனர்.

என் உழைப்பு, சிந்தனை, ரத்தம், அனுபவம் எல்லாவற்றையுமே இதில் நான் கொட்டி, ஒவ்வொரு காட்சியையும் எடுத்திருந்தேன். எனக்கு தெரிவிக்காமலேயே, நீளத்தை குறைக்கிறேன் என்று சொல்லி, "கிளைமாக்ஸ்' காட்சிகளை வெட்டியும், குறைத்தும் விட்டனர்.

படம் வெளிவந்தது; எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

வாழ்க்கையிலேயே, ஒரு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டு வருடம், ஒரு புதுப் படத்திற்கும் நான் ஒப்பந்தமாகவில்லை.

ஒருவேளை சோற்றுக்கே தகராறு என்ற நிலை வந்து விட்டது. என் சொத்தை அடமானம் வைத்திருந்த நண்பர்களிடம் போய், பத்து ரூபாய் கடனாய் கேட்டேன்... "இல்லை' என்று அவர்கள் கூசாமல் சொல்லி விட்டனர்.

மின்சாரக் கட்டணம் கட்டாததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, முன்று நாட்கள், விளக்கு கூட இல்லாமல், பட்டினியாக வீட்டிலேயே சிறைபட்டுக் கிடந்தேன். சே... என்ன வாழ்க்கை!

— 1968
ல், சந்திரபாபு ஒரு பத்திரிகையில் எழுதியது.


 தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -19

இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.



Post a Comment

Previous Post Next Post