மத ஒற்றுமைக்கு இந்தியாவிலேயே தனிச்சிறப்பு பெற்றுள்ளது நெல்லையப்பர் கோவில். இங்கு, விடையேறிய பெருமான், இஸ்லாமிய அன்பரான, "அன்வருதீன்' என்பவரின் பெயரை ஏற்று, "அனவரத லிங்க'மாகக் காட்சியளிக்கிறார்.
நவாப் அன்வருதீனின், மனைவி நோய் வாய்ப்பட்டாள். அவரது நண்பர்கள் நெல்லையப்பரை வேண்டிக் கொண்டால், நோய் தீரும் என்று கூறினர்; அன்வருதீன் அவ்விதமே செய்தார். அவன் மனைவியின் நோய் நீங்கப் பெற்றது.அன்பர்கள் வேண்டியபடி சிவனாருக்கு, ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜைக்குரிய மானியமும் அளித்தார் அன் வருதீன்.
அன்று தொட்டு அந்த இஸ்லாமிய அன்பர் அன்வருதீன் பிரதிஷ்டை செய்த லிங்கம், "அன்வருதீன் லிங்கம்' ஆயிற்று. காலப்போக்கில் மருவி, "அனவரதலிங்கம்' ஆகியது. அனவரதலிங்க வரலாற்றுக் குறிப்பு, நெல்லையப்பர் கோவில் பிரகாரச் சுவரில், எழுதி வைக்கப்பட்டுள்ளது.
Super sir about my area
ReplyDeletePost a Comment