Translate

1 - அலுக்க வைக்கும் பேச்சிற்கு இப்படியா தண்டனை?

 இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.

********

புகழ் மிக்க எழுத்தாளர் மார்க் டுவைன், தன் அனுபவம் ஒன்றைக் கூறுகிறார்:

ஒரு பொதுநலப் பணிக்கு, நிதி சேர்க்கும் கூட்டத்திற்கு அழைத்திருந்தனர்; போயிருந்தேன். அங்கே நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவைக் கேட்ட முதல் பத்து நிமிடங்களில், என் மனம் இளகி விட்டது. அப்பொழுது என் கையிலிருந்த எல்லாப் பணத்தையுமே அந்த நிதிக்கு நன் கொடையாகக் கொடுத்துவிட வேண்டுமென்று எண்ணினேன்.


பேச்சாளர் தொடர்ந்து பேசிக் கொண்டு சென்றார். இன்னும் பத்து நிமிடம் போயிற்று. என் பையிலுள்ள பணம் முழுவதையும் வங்கியில் போட்டுவிட முடிவு செய்தேன்.


மேலும், பத்து நிமிடங்கள் சென்றன. பேச் சாளர் அறுவை அதிகமாயிற்று. அந்த நிதிக்கு ஒவ்வொரு வரும் நன்கொடை அளிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி, திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தார். அப்பொழுது நான், ஒரு முடிவுக்கு வந்தேன். இதில், ஏதோ சூது இருக்கிறது. எனவே, இதற்கு நாம் ஒரு பைசா கூட நன்கொடை கொடுக்கக் கூடாது என்று எண்ணினேன். இறுதியாக, சொற்பொழிவு முடிந்தது. பணம் வசூலிக்கும் தட்டை என்னிடமும் கொண்டு வந்தனர். அதுவரை அந்த அறுவைப் பேச்சைக் கேட்டு, சலித்துப் போன என் சோர்வுக்கு, நஷ்ட ஈடாக அந்தத் தட்டிலிருந்து இரண்டு பவுண்டுகளை (இங்கிலாந்து பணம்)எடுத்து, என்னுடைய பையில் போட்டுக் கொண்டேன்... 

நன்றி தினமலர் 30.5.2010




Post a Comment

Previous Post Next Post