Thursday, October 31, 2024

15. Setting up of Mail monitoring Units (MMUs) at Directorate / Circle / Region and Division level for monitoring of Mail / Parcel operations and Delivery

Department of Posts (Parcel Directorate) F.No. 18-01/2023-PD dt 31.10.2023 – 

As per para 3 of the SOP dt 21.06.2023 MMUs has to be set up at Directorate / Circle / Region and Division level for effective monitoring of Mail / Parcel operations and delivery.

It has also specifically provided that Divisional MMUs has to be provided with 2-3 OAs to ensure effective monitoring of booking, processing and delivery of Mail and Parcel on daily basis as well as flagging issues for taking remedial measures by the authorities concerned.

It was also instructed that MMUs should not be assigned with any other work not related to booking, processing and delivery of Mail and Parcel.

During the review it was reported that dedicated and exclusive teams are not provided, to coordinate with Circle / Regional MMUs

As Mail and Parcel volume handled during the current financial year has shown signs of growth over the volume handled during the previous years, to enhance the monitoring of mail operations Circles are requested to provide 2-3   exclusive OAs in each Divisional MMUs ...

அஞ்சல் துறையின் கட்டிற்கான இயக்குநரகத்தின் 31.10.2023 தேதியிட்ட  கடித எண் 18-01/2023-PD வாயிலாக இயக்குநரக / வட்ட / மண்டல / கோட்ட அளவில் Mail monitoring Units (MMUs) அமைப்பது குறித்த வழிமுறைகள் வழங்கப்பட்டது.

அந்த கடிதத்தின் பாரா 3 ன் படி தபால் / கட்டுகளின் கையாளுதல் மற்றும் பட்டுவாடா குறித்து சரியாக கண்கானித்திட இயக்குநரக / வட்ட / மண்டல / கோட்ட அளவில் Mail monitoring Units (MMUs) அமைக்க அறிவுருத்தப்பட்டுள்ளது.

அதன் படி தபால் / கட்டுகளின் கையாளுதல் மற்றும் பட்டுவாடா குறித்து சரியாக கண்கானித்திட கோட்ட அளவில் 2-3 எழுத்தர்களை பிரத்தியேகமாக நியமத்திடவும் அவர்களை கொண்டு அன்றாடம் அறியப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் அறிவுருத்தப்பட்டது.

இதன் காரணமாக MMUக்களில் உள்ள எழுத்தர்களுக்கு  தபால் / கட்டுகளின் கையாளுதல் மற்றும் பட்டுவாடா குறித்து சம்பந்தப்படாத வேலைகளை அவர்களுக்கு ஒதுக்குதல் கூடாது என சொல்லப்பட்டுள்ளது.

MMU செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் மண்டல / மாநில நிர்வாகங்களுடன் ஒருங்கினைந்து செயல்பட கோட்ட அளவில் பிரத்தியேகமாக 2-3 எழுத்தர்கள் நியமக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டது. 

சென்ற ஆண்டு கையாளப்பட்டதை விட அதிக அளவிலான தபால் / கட்டுகள் இந்த ஆண்டு கையாளப்படுவதால் அதன்  கையாளுதல் மற்றும் பட்டுவாடாவினை கண்கானிக்கும் பணியினை மேம்படுத்திட ஒவ்வொரு மாநில நிர்வாகமும் கோட்ட அளவில் 2-3 எழுத்தர்களை பிரத்தியேகமாக கண்டிப்பாக நியமத்திட அறிவுருத்தப்பட்டுள்ளது...



*Have a look comrade* - R.Maharajan

No comments:

Post a Comment