DOP & PW F.No 21/05/2023- P&PW (F) dt 20.10.2023 -
Provisions in GPF (CS) Rules, 1960 has been reviewed to permit an advance for the following purposes:
Illness of self, family members or dependents
Education of family members or dependent of the subscriber. Education will include primary, secondary and higher education, covering all streams and educational institutions
Obligatory expenses viz betrothal, marriage, funerals or other ceremonies
Cost of legal proceedings
Cost of defence
Purchase of consumer durables
Pilgrimage and visiting place of eminence. This will include any travel and tourism related activities.
12 months pay or 3/4th of the amount at credit in GPF whichever is less will be limit of advance
Will be recoverable in a maximum of 60 installments
Sanctioned by Head of office
Maximum time limit of 15 days for sanction and payment of advance from the fund. In case of emergencies like illness etc., the time limit may be restricted to 7 days.
No documentary proof will be required to be furnished by the subscriber. A simple declaration is by the subscriber explaining the reasons for advance would be sufficient...
GPF லிருந்து முன்பணம் எடுத்திடுவதற்கான அறிவுருத்தல்கள்:
தனக்கு, குடும்பத்தாருக்கு, தன்னை சார்ந்தோருக்கு ஏற்படும் உடல் நலக்குறைவிற்காக
குடும்பத்தாரின், தன்னை சார்ந்தோரின் கல்வித் தேவைக்காக. கல்வி என்பதில் தொடக்கக் கல்வி, நடுநிலை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் உள்ள அனைத்து வகையான மேல்நிலைக் கல்வி அடங்கும்.
நிச்சயதார்த்தம், திருமணம், இறுதிச்சடங்கு, மற்ற பிற சடங்குகளுக்கு தேவைப்படும் கட்டாய செலவுகளுக்கு
சட்டத் தீர்வு காண ஏற்படும் செலவீனங்களுக்கு
வழக்கறிஞர் செலவீனங்களுக்கு
வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிட
புனித யாத்திரை மற்றும் முக்கியமான இடங்களுக்கு செல்ல. இவற்றில் சுற்றுலாவாக செல்லும் அனைத்து பயணங்களும் அடங்கும்.
12 மாத ஊதியம் அல்லது அவரது GPF கணக்கிலிருக்கும் தொகையில் 3/4 பங்கு தொகை இவற்றில் எது குறைவோ அது முன்பணமாக எடுத்திட அனுமதிக்கப்படும்.
அதிகபட்சமாக 60 தவனணைகளில் இந்த முன்பணம் பிடித்தம் செய்யப்படும்.
துறைத் தலைவரால் அனுமதிக்கப்படும்.
GPF தொகையினில் கோரப்படும் முன்பணத்தினை அனுமதித்து அதனை சந்தாதாரருக்கு செலுத்திடுவதற்கு அதிகபட்சமாக 15 நாட்கள் கால வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவு போன்ற அவசர காரணங்களுக்காக GPF தொகையினில் முன்பணம் கோரப்படும் போது 7 நாட்களுக்குள் அனுமதித்து அதனை சந்தாதாரருக்கு செலுத்திட வேண்டும்...
இந்த காரணங்களுக்கு தனியாக சான்றாவணம் எதுவும் சமர்பிக்கத் தேவையில்லை, காரணங்களை பிரகனப்படுத்தி சந்தாதாரர் விண்ணப்பத்தினை சமர்ப்பித்தால் போதுமானது...
*Have a look comrade* - R.Maharajan
No comments:
Post a Comment