தனியார் துறையில் பணியாற்றிய அனுபவமும் அதுவே அரசுத் துறையில் பணியாற்றும் அனுபவத்தையும் கொண்டு , பணியினை சீரும் செம்மையாக நிறைவேற்றிடத் தேவையான காரணிகள் ( factors) மற்றும் குணநலன்கள் (behavioral aspects) பற்றி சிந்தித்த போது ...
தொழில்சார்ந்து கற்றதும்(occupational learning)
அனுபவத்தில் கற்றதும்
(experiential learning) இரண்டையும் ஒருங்கிணைத்து பார்த்த போது ஒவ்வொருவருக்கும்
அவர்கள் கடமைக்கும், தொழிலுக்கும் தேவையான skill வேறு வேறு மாதிரி இருக்கும். ஆனால் skill மட்டும் அமைந்து விட்டால் போதாது .. அதனுடன் behavior ம் சேரும் போது,
competency எனும் combined force கிடைக்கிறது.
1) Occupational Knowledge- துறை சார்ந்த அறிவு
தொழிலுக்கு அத்தியாவசியமான
துறை சார்ந்த விபரங்களை அதன் practical
application nature டன் தெரிந்து வைத்துக் கொண்டு, அதில் நிகழும் முன்னேற்றங்களுக்கு
ஒப்ப தன்னை எப்போதும் update செய்து கொள்ளுதல். இந்த அவசியத்தை
உடன் வேலை செய்கின்றவர் களுக்கும் வலியுறுத்தி அவர்களுக்கும் learning வாய்ப்புகளை தொடர்ச்சியாக உருவாக்கித் தருதல்
2) Adaptability- இசைந்து போகும் தன்மை
உடன் வேலை செய்கின்றவர்களுக்கு
வேலைக்குத் தேவையும் தகுதியுமான பல Option களை சிபாரிசு செய்து, அதனை நிறைவேற்றும் உற்சாகமும்தருதல் ஒரு வேலைக்கு பலதரப்பட்ட எதிர்பார்புகள் இருக்கும் .. அதுவும்
பலரிடம் இருந்து. இதனைப் புரிந்து கொள்ளுதலும், அதற்கு தேவையான தகவல், திட்டமிடுதல் இதனை எப்படி critical thinking வழியாக ஒருங்கிணத்தல் ,
அப்படி ஒருங்கிணைக்கும் போது
, வேலை செய்பவர்களின் comfort
+ வேலைகளை அவசியம்
(Importance) + அவசரம் ( urgency ) இதையெல்லாம் பக்குவமாக சீர்தூக்கி, முதன்மைப்படுத்திக் கொண்டு( Prioritize ) செய்து வேலையை முடித்தல்
3) Inclusiveness- பலரை அரவணைத்து செல்லுதல்
வேலையில் ஈடுபடுகின்றவர்கள்
அனைவரும் வேறு வேறு கல்வித் தகுதி ( academics
) , வேறு வேறு பின்புலம்
(background) , வேறு வேறு கலாச்சார பிண்ணனி
(culture) கொண்டவர்கள் எனும் பேதம்
( diversity) புரிந்து கொண்டு, இந்த பேதம் , அந்த வேலை மீதான approach, attitude , இதில் தாக்கம் (impact ) உருவாக்கும் என்பதையும் கவனத்தில் கொண்டு ,அவர்கள் அனைவரையும் அவர்களின் கருத்துகளைக் கேட்டு , பிறரின் கருத்துகளையும் அவர்களுக்கு விளக்கி அரவணைத்து செல்லுதல்.
4) Initiative - முனைப்பு
எதிர்பார்த்து, மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருத்தல்.
யாராவது வந்து சரிசெய்வார்கள்
என காத்திருக்காமல், சவால்களுக்கும் இடைஞ்சல்களுக்கும்
தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுத்தல். காரியம் முடியும் வரை அதில் சோர்வில்லாமல்
ஈடுபடுதல்
5) Accountability- நம்பகத்தன்மை
பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதும்
அதனை ஒப்புக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளின்படி, தாமதமின்றி, நிறைவேற்றி, அதன் மூலம் பெறுவது நம்பகத்தன்மை
6) Work Quality- வேலையின் தரம்
Work Quality என்பது நிறுவனம், அதன் பணியாளர்கள், நற்பெயருடன் நேரடித் தொடர்பு கொண்ட அம்சம் என்பதால் அதில் அதிக கவனம் அவசியம்.
வேலைக்கான ஒப்புக் கொள்ளப்பட்ட
தரம் சீராக இருக்க ஆங்காங்கே ஆய்வு நிலைகள் ( check
points ) வேலை குறித்து வரும்
கருத்துகளை (feedback) ஒருங்கே தொகுத்தல், அது குறிப்பிடும் தரம் தொடர்பான கருத்துகளுக்கு தேவையான கவனமும், சீரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளுதல்.
வேலைக் குறைபாடுகள் (deficiency in Service ) , குறைகள் (defects ) இது குறித்து வரும் கருத்துகளைக் கொண்டு, வேலை நிறைவேற உருவாக்கிய செயல் திட்டத்தினை குறிப்பிட்ட இடைவெளியில்
ஆய்வு செய்தல் (reviewing the process
frequently).அதில் முன்னேற்றம்
கொண்டு வருதல்.
7) Communication-
தகவல் பரிமாற்றம்
தகவல்கள், வேலையில் இருக்கும் முன்னேற்றம், சவால்கள், அதனை எதிர்கொண்ட விதம், வேலை நிறைவேற துணை நின்றவர்கள் இவர்கள் குறித்த விபரங்கள் சுருக்கமாவும் (brief ) , உரியவருக்கு குழப்பம் தராமலும் (without ambiguity) , வேலையில் ஈடுபடுகின்றவர்களின் உற்சாகம் குறையாமல் இருக்குமாறும் செய்யப்படும் தகவல் பரிமாற்றம்.
மேற்காண் ஏழு காரணிகளும், குணநலன்களுமே பெருநிறுவன நிர்வாகத்தில் பணியாளர்களின் பங்கை
( corporate / organizational administration) தீர்மானிக்கிறது.
அகில(லா)ப்ரியன் (எ) வேங்கடசுப்ரமணியன்.கி . Coimbatore HO 641001
Post a Comment