தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -10
இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.
இளவரசனின் தேர்க்காலில் கன்று அடிபட, ஆராய்ச்சி மணி அடித்த பசு பற்றி, படித்திருக்கிறோம். அப்ரூசோ நாட்டில், ஜான் என்ற அரசன் ஆட்சியில், அப்படியொரு மணி இருந்தது; ஒரு நாள் அது ஒலித்தது. வயதான, வாடிப் போன குதிரையொன்று, அந்த மணியின் கயிற்றை இழுத்தது. உண்மையில் அது நீதி கேட்டு வரவில்லை; பசியால், அந்தக் கயிற்றைக் கடித்தது. விவசாயி ஒருவர், அந்தக் குதிரையை வளர்த்து, வயதான பிறகு விரட்டி விட்டது விசாரணையில் தெரிய வந்தது. உடனே அரசரும், அவரது அமைச்சர்க்கும், நீதி கேட்டு குதிரை வந்ததாகவே பாவித்து, அந்த விவசாயி, குதிரையைப் பராமரிக்க வேண்டுமென்று ஆணையிட்டனர்; அபராதமும் விதித்தனர்.
Post a Comment