• இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
• திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
• சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும். ஆதலால் இந்நூல் திரிகடுகம் என்றுஅழைக்கப் படுகிறது
அரு மறை காவாத நட்பும், பெருமையை
வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும், யாண்டானும்
செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும், - இம் மூவர்
ஒன்றாள் எனப்படுவார். . . . .[55]
"அரு மறை காவாத நட்பும்" - இரகசியங்களை காக்காத நண்பனும்
"பெருமையை வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும்" - மானத்தை விட்டுவிட்ட பெண்களும்
"யாண்டானும் செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும்" - எப்போதும் கோபத்துடன் இருக்கும் பணியாளரும்
"இம் மூவர் ஒன்றாள் எனப்படுவார்" - இந்த மூன்று வகையான மக்களும் நம்பத்தகாதவர்கள் என கருதப்படுவர்
நம்பிக்கைக்கு உரியவர்கள் யார், நம்பத்தகாதவர்கள் யார் என்பதை தெளிவாக கூறுகிறது
மறைமொழியை வெளிப்படுத்தாத நட்பும், பெருமைக் குணத்தை விரும்பாத தலைவனும், தர்மத்தின் நீங்கிய பெண்ணும் ஒற்றர்கள் என்று சொல்லப்படுவார்
This verse describes three types of people who are considered unreliable:
"A friend who does not keep secrets" - This highlights the importance of trust and confidentiality in friendships, emphasizing that a true friend is someone who can be relied upon to keep sensitive information private.
"A woman who has abandoned her honor and modesty" - This refers to a woman who has lost her sense of shame and moral integrity, suggesting that these qualities are essential for maintaining respect and dignity.
"A servant who is always angry and complaining" - This refers to an employee who is constantly dissatisfied and expresses their discontent through anger and complaints, emphasizing the importance of having a positive and cooperative attitude in the workplace.
These three types of people are considered untrustworthy, highlighting the importance of loyalty, integrity, and a positive demeanor in building strong relationships and maintaining a harmonious environment.
Post a Comment