களைப்பை நீக்கி சுறுசுறுப்பைக் கொடுக்கும் ஏழைகளின் பானம், தேனீர். உலகச் சந்தையில் இந்தியத் தேயிலைக்கு நல்ல கிராக்கி.ஐயாயிரம் வருடங்களாக சீனர் கள், தேனீர் குடித்து வந்தாலும், நம் நாட்டில் அதற்கு முன்பே தேயிலை இருந்துள்ளது. புத்த ஜாதகக் கதைகளில் தேயிலை பற்றிய குறிப்பு கள் வருகின்றன.
ஆங்கிலேயர்களின் தேசிய பானம் இது. "டீ' என்பதற்கு சீன மொழியில், "சா' என்று பெயர். அதுவே, நம்மிடையே, "சாய்' என்று வழங்கலாயிற்று. தேயிலைச் செடியின் நுனி, அதாவது, இரண்டு இலைகளுடன் கூடிய கடைசிக் கொழுந்துதான் பானத்துக்குக் பயன்படுகிறது. நல்ல தேயிலை, அது பயிரிடப்படும் பூமியைப் பொறுத்திருக்கிறது.
சீனாவில் தேயிலைச் செடிகளிடையே மல்லிகைச் செடிகளையும் சேர்த்துப் பயிரிடுகின்றனர். இதனால், சீனத்துத் தேயிலையில் மல்லிகையின் மணம் வீசும்.ஜப்பானியர்கள் தேனீர் அருந்துவதை ஒரு கலையாக, ஒரு சடங்கு போலச் செய்கின்றனர். விருந்தாளிகளை அழைத்து நன்கு அலங்கரிக் கப்பட்ட அறையின் நடுவே மரியாதையும், அன்பும் கலந்த உபசரிப்போடு சின்னஞ்சிறிய தேனீர் கோப்பைகளில், விசேஷமாகத் தயாரித்த பானத்தை ஊற்றிக் கொடுத்து, அவர்கள் எதிரே தாங்களும் மண்டியிட்டு அமர்ந்த வண்ணம் தேனீர் அருந்துவர். உலகத் தேயிலையின் தேவையை சமாளிக்க புதிய பிரதேசங்களிலெல்லாம் இந்தச் செடியைப் பயிரிட ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றனர். ***
Post a Comment