Translate

40. GDS Welfare fund -1

Team's Daily Bytes

GDS Welfare fund -1

By A.Kesavan, Asst General Secretary

.எண்

GDS ஊழியருக்கு வழங்கப்படும் சலுகையின் பெயர்

வழங்கப்படும்

 நிதி உதவி தொகை

01.

பணி   நேரத்திலோ () பணி நேரம் அல்லாத போதோ இறக்க நேரிடும் GDS ஊழியரின் உடனடி இறுதி சடங்கு செலவிற்காக, அவரது குடும்பத்தாருக்கு வழங்கப்படும் நிதி உதவி

ரூ.11,000/-

02.

பணி நேரத்திலிருக்கும்போது, தீவிரவாத நடவடிக்கையால்/ஆயுதம் ஏந்திய தீவிரவாத கும்பலால் இறக்க நேரிடுதல்

ரூ.1,65,000/-

03.

பணி நேரத்திலல்லாதபோது கலவரத்தாலோ/கொள்ளையர்களாலோ தீவிரவாதிகளாலோ இறக்க நேரிடும் GDS ஊழியருக்கான நிதி உதவி

ரூ.13,200/-

04.

பணி நேரத்திலிருக்கும்போது விபத்தினால், GDS ஊழியர்கள் இறக்க நேரிடும் போது வழங்கப்படும் நிதி உதவி

ரூ.27,500/-

05.

GDS ஊழியரின் இறுதி சடங்கிற்கான நிதி உதவி

(வாரிசு இல்லாத பட்சத்தில் இறந்த GDS ஊழியரின் சகோதரரோ/சகோதரியோ/நெருங்கிய உறவினரோ இறுதி சடங்கு மேற்கொள்ளும் பட்சத்தில்)

ரூ.5,500/-

06.

புற்றுநோய்/மூளை கோளாறு/சிறுநீரக கோளாறு/மாற்று, இதய அறுவை சிகிச்சை போன்றGDS ஊழியரின் பேரறுவை (Major Surgery) சிகிச்சைகளுக்காக வழங்கப்படும் நிதி உதவி.

ரூ.22,000/-

07.

பணி நேரத்திலிருக்கும்போது விபத்து ஏற்பட்டு அதனால் 3 நாட்களுக்கு மேல் மருத்துவமனையிலிருக்கும் பட்சத்தில் GDS ஊழியருக்கு வழங்கப்படும் நிதி உதவி

 ரூ.5,500/-


SOURCE : Directorate Lr. No. (No.20-09/2019 WL& Sports dtd 11.09.24 


Post a Comment

Previous Post Next Post