16-ஆம் நூற்றாண்டின் பிரபலமான தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் இன்றும் பலரைக் கவர்ந்திழுக்கின்றன. தற்போது, "லிவிங் நாஸ்ட்ராடாமஸ்" என அழைக்கப்படும் அத்தோஸ் சாலோம் என்ற பிரேசிலிய சித்த மருத்துவ நிபுணர், 2025-ம் ஆண்டில் உலகில் பல பேரழிவுகள் நிகழும் எனக் கணித்துள்ளார். அவரது கணிப்புகள் பலரால் ஆச்சரியத்துடன் எதிர்கொள்ளப்படுகின்றன.
COVID-19 மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு போன்ற உலக நிகழ்வுகளை முன்னரேக் கூறிய பிரேசிலிய "தீர்க்கதரிசி" அதோஸ் சலோமே, 2025 ஆம் ஆண்டிற்கான தனது கணிப்புகளை ‘டெய்லி ஸ்டார்’ பத்திரிகையுடன் பகிர்ந்து கொண்டார்.
அவர் என்ன கூறியுள்ளார் என்று பார்ப்போமா..
புதிய மனிதர்களின் எழுச்சி: மரபணு மாற்றம் (genetically modified) மூலம் உருவாக்கப்பட்ட புதிய மனிதர்கள் தோன்றுவார்கள் என சாலோம் கூறுகிறார். இவர்கள் தீவிர நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். ஆசிய நாடுகளில் தான் ‘புதிய மனிதன்’ உருவாகுவான் என அவர் கணித்துள்ளார்.
AI-யின் ஆதிக்கம்: செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் மிக விரைவாக வளர்ந்து, மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறும் அளவுக்கு வளர்ந்துவிடும் என அவர் எச்சரிக்கிறார். அதுதான் இப்பொழுதே தெரிகிறதே. போக்குவரத்து மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற முக்கியத் துறைகளில் AI தீர்மானங்களை எடுக்கும்.
பூமியைத் தொடும் உயிரினங்கள்: செவ்வாயில் உயிரினங்கள் இருப்பதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்படும். ஆனால், இந்த தகவலை பெரும் நாடுகள் மறைத்து வைக்க முயற்சி செய்யும். எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் உட்பட தனியார் வீரர்கள் இதனை வெளிக்கொனரலாம் என்று அவர் மேலும் கூறினார்.
பழைய நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் எப்போதும் மிகவும் தெளிவாக இருக்காது. அவை பெரும்பாலும் குறியீட்டு மொழியில் எழுதப்பட்டுள்ளன. எனவே, இந்த கணிப்புகளை எவ்வாறு விளக்குவது என்பது குறித்து பல விவாதங்கள் உள்ளன.
‘லிவிங் நாஸ்ட்ராடாமஸ்’ சாலோமின் கணிப்புகளும் இதேபோன்றவை. அவை எதிர்காலத்தைப் பற்றிய எச்சரிக்கையாகவோ அல்லது கற்பனையாகவோ இருக்கலாம். இவை வெறும் கணிப்புகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதிர்காலம் நம் கைகளில்தான் உள்ளது. நாம் எடுக்கும் முடிவுகளே நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும். எல்லாரும் நலமுடன் வளமுடன் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
-S.B.
Post a Comment