Translate

"தியானம்' என்ற சொல்லே, ஜப்பானிய மொழியில், "ஜென்' ஆயிற்று

"தியானம்' என்ற சொல்லே, ஜப்பானிய மொழியில், "ஜென்' ஆயிற்று என்பர்.

கி.பி., முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில், பவுத்த கோட்பாடுகள், மத்திய ஆசியா வியாபாரப் பாதைகள் வழியாக, சீனாவுக்குப் பரவின. கி.பி., ஆறாம் நூற்றாண்டில், பெரும்பாலான சீன மக்கள், பவுத்தத்தை ஏற்றுக்கொண்டு விட்டனர். பல சீன அரசர்கள், மடாலயங் களைக் கட்டவும், பராமரிக்கவும் தேவையான நிதி உதவிகளைச் செய்தனர். புத்த பிட்சுகளின் வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.

சீன மக்கள் இயல்பாகவே, உலக வாழ்வில் பற்று கொண்டவர்கள். ஆதிகால இந்தியர்களைப் போல, மேலுலக வாழ்க்கையைப் பற்றி அவர்கள் அதிகமாக சிந்தித்தது இல்லை. நன்றாக உழைத்து, ஆனந்தமாக வாழ்ந்தனர். விரக்தி, நிராசை, கூட்டுக்குள்ளே சுருங்கிக் கொள்ளும் தன்மை இவற்றிலிருந்து விடுபட்டு, பவுத்த கோட் பாடுகளில், தங்கள் இயல்பிற்கு ஏற்ப மாற்றம் செய்து கொண்டனர்.

புத்த பிட்சுகள், மற்ற சாதாரண மக்களைப் போல், உடல் உழைப்பு இல்லாமல், அரசாங்க மானியத்தின் உதவியால் வாழ்க்கை நடத்தினர். சமயங்களில், பிச்சை எடுத்து காலம் தள்ளினர். வாழ்நாள் முழுவதும், மத நூல்களைப் படிப் பதிலும், பாராயணம் செய்வதிலும் ஈடுபட்டி ருந்தனர். தத்துவ விசாரணையும், விவாதமும், அவர்களுக்கு ஒரு பொழுது போக்காக இருந்தன. பிட்சுகளின் போக்கு, சீன மக்களுக்கு வெறுப்பைத் தந்தது.

கி.பி.520ல், தென்னிந்தியாவிலிருந்து சீனாவிற்கு வந்த போதிதர்மரால், ஜென்னின் மூலக் கொள்கைகள் பரப்பப்பட்டன என்று சொல்லப் படுகிறது. புத்த பிட்சுகளின் போக்கில், சீனர்கள் அதிருப்தியடைந்திருந்த நிலையில், ஜென் வேக மாகப் பரவி, செல்வாக்கு பெற்றது.

Dinamalar 29.8.2010

 தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -26

இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.



Post a Comment

Previous Post Next Post