Translate

"வேலூர் கல்லறை' -"வேலூர் புரட்சி'

* ஜூலை 10, 1806  அன்று, விடியற்காலை 2.30 மணிக்கு, வேலூர் கோட்டை அமளி துமளிபட்டது; புரட்சி கிளம்பிற்று. பிரசித்தி பெற்ற, "வேலூர் புரட்சி' எனும் சுதந்திரப் போர் துவங்கியது. புரட்சியாளர்களின் முதல் பலியாக விழுந்தவன், கோட்டை தளபதியாக இருந்த, கர்னர் பன்கோர் என்பவன். அவனையடுத்து கர்னல் மக்கராஸ், மேஜர் ஆம்ஸ்ட்ராங், காப்டன் வில்சன், லெப்டினன்ட் வின் சிப், லெப்டினன்ட் ஜாலி, காப்டன் மில்லர், லெப்டினென்ட் ஒரெய்லி, லெப்டினென்ட் ஸ்மார்ட், லெப்டினென்ட் டிச்பர்ன் முதலியவர்கள் அடுத்தடுத்து உயிர் துறந்தனர். பண்டக சாலையில் பொறுப்பாளராக இருந்த  மான், தளவாட சாலை பொறுப்பாளரான  கில், சம்பளப் பட்டுவாடா அதிகாரியாக இருந்த  ஸ்மித் ஆகியோரை சுட்டுக் கொன்ற புரட்சியாளர்கள், பண்டகசாலை, ஆயுதக் கிடங்கு, கஜானா முதலியவற்றை கைப்பற்றினர். மொத்தம் 117 வெள்ளையர்கள், அந்தப் புரட்சிக்குப் பலியாயினர். பிறகு, வெகு காலம் கழித்து, வேலூர் மாவட்டக் கலெக்டராக வந்த ஒரு வெள்ளையர், கோட்டை மைதானத்திற்கு எதிரில் இவர்கள் நினைவாக, "வேலூர் கல்லறை' என்றழைக்கப்படும் இடத்தில், ஒவ்வொரு வருக்கும் நினைவுச் சின்னம் ஏற்படுத்தி, பெயர்களையும் பொறித்து வைத்தார். 

 தினம் ஒரு செய்தி - படித்ததில் பிடித்தது -15

இந்தப் பகுதி பொழுதுபோக்கிற்காக அதே நேரத்தில் பல பழைய அரிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக வெளியிடப்பட இருப்பதாகும். தமிழக நண்பர்களுக்காக மட்டும். இவைகள் எல்லாமே நான் படித்ததில் விரும்பியதை தொகுத்து வைத்தவைகள் தான்.



Post a Comment

Previous Post Next Post