கடந்த 1954ல், தமிழகத்தில் பெரும் புயல் வீசியது. புயலோடு அடைமழையும் சேர்ந்து கொண்டது. ஏழை மக்களின் குடிசைகள், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. தங்க இடமின்றி, உண்ண உணவின்றி, ஏழைகள் பலர் துன்பமடைந்தனர். அண்ணாதுரை, உதவி நிதி திரட்ட, கழகத் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டார். அண்ணாதுரை ஆணைக்குட்பட்டு, சிவாஜி கணேசன், புயல் நிவாரண நிதி திரட்டப் புறப்பட்டார். "பெரிய அளவில் நிதி திரட்டித் தருபவர்களுக்கு, தங்க மோதிரம் பரிசாகத் தரப்படும்!' என்று, அண்ணாதுரை அறிவித்தது இவருக்கு மேலும் உற்சாகத்தைத் தந்தது. விருதுநகருக்கு, சென்று, தெரு, தெருவாக உண்டியல் ஏந்தினார் சிவாஜி கணேசன். பராசக்தியின் வீர வசனங்களைப் பேசி, துண்டு ஏந்தி, நிதி வசூல் செய்தார். கணிசமான தொகை கிடைத்ததும், அதை உரியவரிடம் ஒப்படைத்தார். ஆனால், புயல் நிவாரண நிதி திரட்டியவர்களுக்கு, அண்ணாதுரை மோதிரம் அணிவித்து நடத்திய விழாவிற்கு, சிவாஜி கணேசன் செல்லவில்லை. காரணம், இவருக்கு அழைப்பும் இல்லை; அணிவிக்க தங்க மோதிரமும் விழாவில் இல்லை. சிவாஜி கணேசனுக்கு, இதனால் கழகத்தின் மீது பற்று குறைந்தது. அதே சமயத்தில், எம்.ஜி.ஆர்., புயல் நிவாரண நிதி, பாராட்டு விழாவில் பாராட்டப்பட்டதை அறிந்தவுடன், தமக்கு எதிராகக் கழகத்தில் உருவாக்கப்படும், சதியை உணர்ந்து கொண்டார் சிவாஜி கணேசன். - "சிவாஜி ஒரு சகாப்தம்' நூலில், எதிரொலி விசுவநாதன்.
சிவாஜி கழகத்திலிருந்து ஏன் வெளியேறினார்?
0
Post a Comment